சிரஞ்சீவியுடன் இளமையான தோற்றத்தில் நடனமாடும் நயன்தாரா | கதையின் நாயகன் ஆனார் முனீஷ்காந்த் | வெனிஸ் திரைப்பட விழாவில் உலகின் கவனத்தை ஈர்த்த படம் | பிளாஷ்பேக்: 30 ஆண்டுகளுக்கு முன்பு கலக்கிய கோர்ட் டிராமா | பிளாஷ்பேக் : முதல் நட்சத்திர வில்லன் | நடிகர் சங்க புதிய நிர்வாகிகள் அறிமுக விழா | பேனர் வைக்க விடாமல் தடுத்தது யார்? மனம் திறப்பாரா கேபிஒய் பாலா | புகழ் நடிக்கும் '4 இடியட்ஸ்' | பூ வச்சது குத்தமாய்யா : நவ்யா நாயருக்கு ரூ.1.14 லட்சம் அபராதம் | சினிமா நிகழ்ச்சிகளை புறக்கணிக்கும் ஸ்ரீகாந்த் |
நடிகர் நானி தயாரித்த 'கோர்ட் - ஸ்டேட் வெர்சஸ் எ நோபடி' ஓடிடி-யில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வருகிறது. இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.50 கோடிக்கு மேல் வசூலித்து வெற்றிகரமான படமாக அமைந்தது. இந்த திரைப்படம் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படத்தில் பிரியதர்சினி, சிவாஜி, ஹர்ஷ் ரோஷன் மற்றும் ஸ்ரீ தேவி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். விஜய் புல்கானின் இசையமைத்தார், நடிகர் நானி இந்தப் படத்தை தயாரித்திருந்தார்.
நெட்பிளிக்ஸில் ஓடிடி-யில் இந்த திரைப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகி அதிக பார்வையாளர்களை பெற்றுள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. இதனால் தயாரிப்பு நிறுவனத்துக்கு பெரிய லாபம் கிடைத்துள்ளதாகவும், நடிகர் நானி மீண்டும் அடுத்த படத்துக்குண்டான வேளைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் செய்திகள் வருகின்றது. இன்னும் சில தினங்களில் அடுத்த படத்திற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரலாம் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.