Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

டாப் இயக்குனர்களுடனான கூட்டணி சரிவு : கவனிப்பாரா கமல்ஹாசன் ?

14 ஜூன், 2025 - 10:31 IST
எழுத்தின் அளவு:
Collapse-of-alliance-with-top-directors-Will-Kamal-Haasan-notice
Advertisement

தமிழ் சினிமாவில் பல புதுமையான தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தியதில் கமல்ஹாசனும் முக்கியமானவர். அந்தக் காலத்திலிருந்தே அவருடைய படங்கள் வியாபார ரீதியாக சரியாக ஓடவில்லை என்றாலும் கூட கிண்டலடிக்கப்பட்ட சம்பவம் நடந்ததில்லை. அவரது தோல்விப் படங்கள் கூட இப்போதும் பேசப்படும் படங்களாக இருக்கும். அதற்கு சில உதாரணங்களைச் சொல்லலாம்.

ஆனால், அவர் நடித்து கடைசியாக வெளிவந்த இரண்டு படங்களான 'இந்தியன் 2, தக் லைப்' ஆகிய படங்கள் வியாபார ரீதியாக தோல்வியாக அமைந்தவை. ஆனாலும், அந்தப் படங்கள் கடுமையாக கிண்டலடிக்கப்பட்டதுதான் நிகழ்ந்தது. இத்தனைக்கும் அந்த இரண்டு படங்களையும் இயக்கியவர்கள் தமிழ் சினிமாவின் டாப் இயக்குனர்களான ஷங்கர், மணிரத்னம்.

ஷங்கருடன் 28 வருட இடைவெளிக்குப் பிறகும், மணிரத்னத்துடன் 37 வருட இடைவெளிக்குப் பிறகும் மீண்டும் கூட்டணி அமைத்தார். நீண்டகால இடைவெளி, அவர்கள் முதலில் இணைந்த 'இந்தியன்' மற்றும் 'நாயகன்' படங்கள் தமிழ் சினிமாவில் முக்கியமான படங்கள் என்று இன்றளவும் பேசப்படுகின்றன. இத்தனை வருட இடைவெளி தலைமுறை இடைவெளியாகவும் அமைந்து இன்றைய இளம் ரசிகர்களை கவர முடியாமல் போனதை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்.

அதேசமயம், புதிய கூட்டணியாக லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்த 'விக்ரம்' படம் கமல்ஹாசனின் சினிமா உலக வரலாற்றில் அதிக வசூலைக் குவித்த படம் என்ற சாதனையைப் பெற்றுத் தந்தது. இன்றைய தலைமுறை இயக்குனர்களுடனான கூட்டணியை கமல்ஹாசன் முயற்சிக்க வேண்டும் என்ற குரல் கோலிவுட்டில் கேட்க ஆரம்பித்துள்ளது. அவருடைய அடுத்த படமான 237வது படத்தை ஸ்டன்ட் மாஸ்டர்களான அன்பறிவு இயக்க உள்ளார்கள். அந்தப் படத்தில் அதிக கவனம் செலுத்தி 'விக்ரம்' படத்தை விடவும் பெரும் வெற்றியைக் கொடுக்கும் விதத்தில் அவர் உழைக்க வேண்டும் என அவரது ரசிகர்களும், திரையுலக நலம் விரும்பிகளும் எதிர்பார்க்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
ரஜிஷா விஜயனுக்கு கை கொடுக்கும் வருடமாக 2025 அமையுமா?ரஜிஷா விஜயனுக்கு கை கொடுக்கும் ... ‛கலைமாமணி' பட்டம் பெற்ற நாட்டுப்புற பாடகி கொல்லங்குடி கருப்பாயி காலமானார் ‛கலைமாமணி' பட்டம் பெற்ற ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

நிவேதா - Dindigul,இந்தியா
14 ஜூன், 2025 - 10:06 Report Abuse
நிவேதா இந்தியன் படத்துக்கு பிறகு கமல் மாறுவேட போட்டி போல வித விதமாக மேக் அப் போட்டு எதோ நடிக்கிறார். விக்ரம் 2 படம் லோகேஷ் தயவால் ஓடியதால் எதோ தான் முன்னணி நடிகர் என்ற நினைப்பில் படம் நடிக்கிறார். அந்த படம் ஓடியதே lcu concept விளம்பரத்தால் தான். மற்ற முன்னணி நடிகர்களுக்கு உள்ள கண்மூடித்தனமான ரசிகர்ளும் இப்போது கமலுக்கு இல்லை. மேலும் அரசியல் காரணங்களால் சமூக வலைத்தளங்கள் அவர் படங்களை கீழே தள்ளி விடுகின்றன. ஆக நடிப்பதை விட்டுவிட்டு தயாரிப்பு துறையில் கமல் இறங்கலாம்
Rate this:
நிக்கோல்தாம்சன் - chikkanayakanahalli , tumkur dt and Bangalore,,இந்தியா
14 ஜூன், 2025 - 09:06 Report Abuse
நிக்கோல்தாம்சன் இது நாள் வரை அவருடன் நடித்த நடிகைகளின் வாழ்க்கைதான் டுமீல் ஆகும் , இப்போ இயக்குநர்களுக்குமா ?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in