ஒரே காரில்... ஒரே கலரில்...: ஜோடியாக திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய், திரிஷா | சாரா அர்ஜுனின் வளர்ச்சி பெருமையாக உள்ளது! - சொல்கிறார் இயக்குனர் ஏ.எல்.விஜய் | விஜய்யின் ஜனநாயகனுக்கு மார்ச் 17ல் சென்சார் சான்றிதழ்! | லெஜெண்ட் சரவணனின் 'லீடர்' படத்தின் டீசர் வெளியானது! | சிக்ஸ் பேக் விபரீதமான முயற்சி! - நடிகர் பரத் | மார்ச் 27ம் தேதியன்று திரைக்கு வரும் ஹாப்பி ராஜ்! | சொன்ன தேதிக்கு முன்பே திரைக்கு வருகிறது 'உஸ்தாத் பகத்சிங்' | 3 வருடங்களுக்கு பிறகு நாயகியாக நடிக்கும் ரைசா வில்சன் | ஆங்கிலோ இந்திய பெண்ணாக நடிக்கும் ப்ரீத்தி முகுந்தன் | நடிகர் ஆனார் அஜித் அண்ணன் |

நடிகை மஞ்சு வாரியர் மலையாளம் மட்டுமல்லாமல் தமிழிலும் கவனம் செலுத்தி நடித்து வந்தாலும் செலக்ட்டிவ் ஆன படங்களில் மட்டும் நடித்து வருகிறார். இன்னொரு பக்கம் குறும்படங்களில் நடிப்பதற்கு கூட அவர் தயக்கம் காட்டுவதில்லை. அப்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் மலையாளத்தில் மம்முட்டி தயாரிப்பில் இயக்குனர் ரஞ்சித் இயக்கிய ‛ஆரோ' என்கிற குறும்படத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது மலையாள பின்னணி பாடகி சித்தாரா கிருஷ்ணகுமார் இயக்கியுள்ள ‛ஏலேலம் கிளி' என்கிற வீடியோ இசை ஆல்பத்தில் ஒரு கதாபாத்திரமாக நடித்துள்ளார் மஞ்சு வாரியர். ஒரு இளம்பெண் தனது மறைந்த அன்னையின் நண்பரை தேடி பயணிப்பது போன்று இந்த பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடலில் இவர் பிரமிக்க வைக்கும் அழகுடன் வெள்ளை உடை தேவதையாக காட்சியளிக்கிறார். இது குறித்த கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.




