ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது |
மலையாள திரையுலகில் கடந்த 40 ஆண்டுகளாக குணச்சித்திர நடிகராக நடித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றவர் பிரபல நடிகர் சீனிவாசன். மேலும் கதாசிரியர், இயக்குனர், பாடலாசிரியர் என இன்னும் சில முகங்களும் இவருக்கு உண்டு. இவரது மகன்கள் வினீத் சீனிவாசன் மற்றும் தயன் சீனிவாசன் இருவரும் மலையாள திரையுலகில் இயக்குனர்களாக, நடிகர்களாக இருக்கின்றனர்.
சமீப காலமாக நடிகர் சீனிவாசன், படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். காரணம் கடந்த சில மாதங்களாகவே அவர் உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். சமீபத்தில் கூட திடீரென அவரது உடல்நிலை மோசமானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின் குணமாகி வீடு திரும்பினார். இருந்தாலும் அவரது உடல் மெலிந்து முகத்தோற்றம் ரொம்பவே மாறி விட்டது ரசிகர்களை வருத்தமடைய வைத்தது.
இந்த நிலையில் மலையாள நடிகர் சங்க கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தந்தார் சீனிவாசன். அவரை கண்டதும் அவருடன் பல படங்களில் இணைந்து நடித்த அவருக்கு அவருக்கு நெருங்கிய நண்பர்களான மோகன்லால், மம்முட்டி இருவரும் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமாக அவரை வரவேற்றனர். கண் கலங்கிய மோகன்லால் அவரை கட்டியணைதது கன்னத்தில் முத்தமிட்டு தனது அன்பை வெளிப்படுத்தினார்.