டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி | பெண்கள் அரசியல் கூட்டங்களுக்கு செல்லக்கூடாது: அம்பிகா அட்வைஸ் | நயன்தாரா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | பிளாஷ்பேக்: மம்பட்டியான் பாணியில் உருவான 'கரிமேடு கருவாயன்' | பிளாஷ்பேக்: தமிழ், பெங்காலியில் உருவான படம் | கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் | பக்தி மயத்தில் கோலிவுட் பார்ட்டிகள் | ‛‛2 ஆயிரம் சம்பளம் கேட்டேன், 4 லட்சம் கொடுத்தார் நட்டி'': சிங்கம்புலி நெகிழ்ச்சி |
‛பார்க்கிங், லப்பர் பந்து' படங்களை தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளிவர இருக்கும் படம் 'டீசல்'. இதனை சண்முகம் முத்துசாமி இயக்கி உள்ளார். அதுல்யா ரவி நாயகியாக நடித்துள்ளார், விநய் வில்லனாக நடித்துள்ளார். திபு நினன் தாமஸ் இசை அமைத்துள்ளார்.
படம் குறித்து ஹரிஷ் கல்யாண் கூறியதாவது: 2014ம் ஆண்டுக்கு முன்பு நடந்த டீசல் மாபியாக்களின் கதை. அதன் நீட்சி இப்போதும் இருப்பதால் கதை இந்த காலகட்டத்திற்கும் பொருந்தும். கப்பலில் இருந்து சுத்திகரிப்பு ஆலைக்கு குழாய் மூலம் எடுத்துக் செல்லும் குரூடாயிலை சுற்றி நடந்த மாபியாக்களின் அக்கிரமங்களும், அரசியல் தலையீடும்தான் கதை. இந்த மாபியாக்களை எதிர்த்து ஒரு மீனவ இளைஞன் போராடுவது திரைக்கதை.
இந்த படத்திற்காக நடுக்கடலில் படகு ஓட்டவும், மீன்பிடிக்கவும் கற்றுக் கொண்டேன். நான் நடிக்கும் முதல் ஆக்ஷன் படம் என்பதால் பல காட்சிகளில் ரிஸ்க் எடுத்து நடித்தேன். ஒரு காலத்தில் தீபாவளி படங்களை ஆர்வத்துடன் பார்த்தேன். ஆனால் இன்றைக்கு என் படமே தீபாவளி ரிலீசாக வெளிவருகிறது. 'பார்க்கிங்', 'லப்பர் பந்து' வரிசையில் 'டீசல்' படமும் ஹாட்ரிக் வெற்றிபெறும். இவ்வாறு அவர் கூறினார்.