செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
மலையாளத்தில் அசோக் ஆர். நாத் என்பவர் இயக்கியுள்ள படம் ஹோலி ஊண்டு. இந்த படத்தில் அம்ரிதா வினோத், ஜானகி சுதிர் என்ற இருவர் லெஸ்பியன்களாக நடித்துள்ளார்கள். இந்த படம் வருகிற ஆகஸ்ட் 12ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டு மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. காரணம் பள்ளியில் படிக்கும் போதே நெருங்கிய தோழிகளாக இருக்கும் இருவர் லெஸ்பியனாக மாறியது பற்றிய கதையில் இந்த படம் உருவாகி இருக்கிறது.
கதைப்படி, விருப்பமின்றி திருமணம் செய்து கொண்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் ஒரு பெண்ணும், வலுக்கட்டாயமாக கன்னியாஸ்திரி ஆக்கப்படும் ஒரு பெண்ணும் ஒரு கட்டத்தில் லெஸ்பியனாக மாறுவதுதான் இந்த படத்தின் கதை என்பதை ட்ரைலரில் காண்பித்துள்ளார். அதோடு அந்த பெண்கள் இருவரும் உதட்டு முத்தம் கொடுக்கும் புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளதால் கேரளாவில் பரபரப்பை உருவாக்கி இருக்கிறது.
குறிப்பாக இதில் ஒரு பெண்ணை கன்னியாஸ்திரி ஆக காட்டி லெஸ்பியனாக மாறுவது போல் கதை உருவாக்கப்பட்டிருப்பதால் அதற்கு கிறிஸ்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.