ஜுலை 4ல் 6 படங்கள் ரிலீஸ் | 2025ன் 6 மாதங்களில் 122 படங்கள் ரிலீஸ் | விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு | அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை : நடிகர் சங்கம் எச்சரிக்கை | தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு | இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் |
மலையாள சினிமாவில் வளரும் நடிகரும், தயாரிப்பாளருமாக இருப்பவர் விஜய்பாபு. படங்களில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி பல பெண்களை நாசம் செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து மலையாள இளம் நடிகை ஒருவர் போலீசில் புகார் அளித்தததை தொடர்ந்து அவர் மீது பாலியல் பலாத்கார வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில் விஜய் பாபு வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
துபாயில் அவருக்கு பல்வேறு தொழில்கள் இருப்பதால் அங்கு தப்பிச் சென்று இருக்கலாம் என்று கருதப்பட்டது. இந்நிலையில் உடனடியாக விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறி கொச்சி போலீசார் விஜய் பாபுவுக்கு இமெயில் மூலம் நோட்டீஸ் அனுப்பினர்.
இதற்கிடையே முன்ஜாமீன் கோரி அவர் கேரள உயர் நீதிமன்றத்தில் விஜய்பாபு மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்னும் ஒருசில தினங்களில் விசாரணைக்கு வருகிறது. அவருக்கு முன்ஜாமீன் கிடைக்க வாய்ப்பிருப்பதால் அதற்குள் அவரை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இதனால் விஜய் பாபு துபாயில் இருந்து வேறு நாட்டுக்கு தப்பிச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. வெளிநாடுகளில் சக்தி மிக்க நபராக உள்ள விஜய்பாபு 10 நாட்களுக்கு ஒரு முறை நாடு விட்டு நாடு செல்வதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் மத்திய அரசின் வெளியுறவுத்துறை கொச்சி போலீசாரின் வேண்டுகோளை ஏற்று விஜய்பாபுவின் பாஸ்போர்ட்டை முடக்கி உள்ளது.