சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு பிரபல மலையாள நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட நிகழ்வு மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் பின்னணியில் மலையாள நடிகர் திலீப் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு மூன்று மாத சிறைவாசத்திற்கு பிறகு பின் ஜாமினில் விடுதலையானார்.
இந்த வழக்கு நடைபெற்று வரும் நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திலீப்பின் நண்பராக இருந்து பின்னர் அவருக்கு எதிராக திரும்பிய இயக்குனர் பாலச்சந்திர குமார் என்பவர் திலீப் மீது விசாரணை அதிகாரிகளை கொல்ல முயற்சித்தார் என்று கூறி குற்றம் சாட்டி புகார் அளித்தார். அதனடிப்படையில் மீண்டும் திலீப் மீது இன்னொரு வழக்கும் பதியப்பட்டது. இந்த வழக்கில் முன்ஜாமீன் பெற்றார் திலீப்.
இயக்குனர் பாலச்சந்தர் குமார் போலீஸாரிடம் அளித்த புகாரில் திலீப் முதல் வழக்கில் ஜாமின் பெறுவதற்கும் அதன்பிறகு விசாரணை அதிகாரிகள் அவரை நெருங்காமல் இருப்பதற்கும் பின்னணியில் நெய்யாற்றின்கரையை சேர்ந்த வின்சென்ட் சாமுவேல் என்கிற பிஷப் ஆதரவாக செயல்பட்டார் என்றும் குற்றம் சாட்டி இருந்தார்.
இதுதொடர்பாக தற்போது போலீசாரிடம் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்த பிஷப் வின்சென்ட் சாமுவேல், பாலச்சந்திர குமார் கூறியவற்றில் எந்தவித உண்மையும் இல்லை என்றும் இது உள்நோக்கத்துடன் கூறப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.