பாலிவுட்டில் தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா பூஜா ஹெக்டே? | 'கருப்பு' வெளிநாட்டு வசூல் : 7 மில்லியன் யுஎஸ் டாலர் | ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நன்றி சொல்லும் ராம் சரண் ரசிகர்கள் | மலையாள படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த லோகேஷ் கனகராஜ் | சமந்தாவின் மா இண்டி பங்காரம் படத்திற்கு போட்டியாக களமிறங்கும் மூன்று படங்கள்! | விஷாலுக்கும் சேர்த்து வேலை பார்ப்பேன் : அமைச்சர் ராஜ்மோகன் | 40 வருடங்களை நிறைவு செய்யும் 'விக்ரம்' | 400 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'ஜெயிலர் - காவாலய்யா' | ரிலீஸூக்கு தயாராகும் சர்வர் சுந்தரம்? | ஹிரித்திக் ரோஷனிடம் வந்து நிற்கும் ஜெயிலர் 2 |

மலையாளத் திரையுலகத்தில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் பற்றிய விசாரணையை மேற்கொள்ள கேரள மாநில அரசால் நியமிக்கப்பட்ட நீதிபதி ஹேமா தலைமையிலான குழுவின் 233 பக்கங்கள் கொண்ட அறிக்கை ஆர்டிஐ மூலம் சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்தது. 2017ம் ஆண்டில் மலையாள நடிகை ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான வழக்கு காரணமாக அந்த விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. பல்வேறு கட்ட விசாரணைகளுக்குப் பிறகு அந்த குழு 2019ம் ஆண்டே அந்த அறிக்கை கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் வழங்கியது. இத்தனை ஆண்டுகள் தாமதத்திற்குப் பிறகு அறிக்கை வெளியானது குறித்து பல்வேறு சந்தேகங்களும் கிளம்பியுள்ளது.
ஐந்து ஆண்டுகளாக இந்த அறிக்கையை அப்படியே வைத்திருந்து வெளியிடாமல் இருந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் கூட குற்றம் சாட்டினார். ஹேமா கமிட்டியின் அறிக்கைக்குப் பிறகு பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய புலனாய்வுக் குழு ஒன்றை கேரள அரசு தற்போது அமைத்துள்ளது.
செப்டம்பர் 10ம் தேதிக்குள் மாநில அரசு சீலிடப்பட்ட கவரில் முழு அறிக்கையையும் சமர்ப்பிக்க வேண்டும் என கேரள உயர்நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஹேமா கமிட்டி அறிக்கையைத் தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் இப்போது வெளிவர ஆரம்பித்துள்ளன. அதைத் தொடர்ந்து மலையாள நடிகர் சங்கத்தின் செயலாளரான சித்திக் ராஜினாமா செய்தார். மலையாள சினிமா அகாடமி தலைவர் ரஞ்சித்தும் ராஜினாமா செய்தார்.
இந்த விவகாரம் தற்போது இந்தியத் திரையுலகம் முழுவதுமே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இயக்குனரும் அடிக்கடி சர்ச்சைக் கருத்துக்களைப் பதிவு செய்பவருமான ராம்கோபால் வர்மா இது குறித்து, “மலையாள சினிமாத் துறைக்காக மட்டுமே அமைக்கப்பட்ட ஹேமா கமிட்டியால் மலையாளத் திரையுலகம் அம்பலமாகிவிட்டது. மற்ற மொழிகள் ஒவ்வொன்றுக்கும் கமிட்டிகள் அமைக்கப்படாவிட்டால், அங்கு என்ன நடக்கிறது என்பதை எப்படி தெரிந்து கொள்ள முடியும்,” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.




