ஓடிடி-க்கு தயாரான நானியின் 'கோர்ட்' | இந்திய பொழுதுபோக்கு துறையின் மதிப்பு 100 பில்லியன் டாலராக உயரும் : பிக்கி தலைவர் கமல் நம்பிக்கை | 2025 தமிழ் சினிமா - காலாண்டு ரிப்போர்ட் | பிளாஷ்பேக் : டி.ராஜேந்தரை ஹீரோவாக்கிய ரஜினி | பிளாஷ்பேக் : ஆதித்தியன் கனவை நனவாக்கிய பாடல் | ஜி.வி.பிரகாசுக்கு கை கொடுக்குமா 'பிளாக்மெயில்'? | 'எம்புரான்' படத்தை எதிர்த்து தமிழ்நாட்டு விவசாயிகள் போராட்டம் | குட் பேட் அக்லி ஓடிடி வெளியாகும் தேதி | வெளிவரும் முன்பே வெற்றிக்கு வழிவகுத்த "கேங்கர்ஸ்" | திரைப்பட விழாவில் 'சந்தோஷ்': மத்திய அரசு அனுமதிக்குமா? |
நடிகர் ரஜினிகாந்த்தின் தீவிர ரசிகரும், நகைச்சுவை நடிகருமான பிஜிலி ரமேஷ்(46) உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்.
யு-டியூப் தளத்தில் பிராங்க் வீடியோ மூலம் பிரபலமானவர் பிஜிலி ரமேஷ். தொடர்ந்து படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து நட்பே துணை, சிவப்பு மஞ்சள் பச்சை, கோமாளி, ஆடை உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
சில மாதங்களுக்கு முன் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. தொடர்ந்து நிதி சிக்கல் உடன் சிகிச்சை பெற்று வந்த இவர் இன்று காலமானார். பிஜிலி ரமேஷ் நடிகர் ரஜினியின் தீவிர ரசிகர் ஆவார். அவர் அளித்த பல பேட்டிகளில் தன்னை ரஜினியின் ரசிகராக காட்டிக் கொண்டவர். இவரது மறைவுக்கு ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மரணத்திற்கு முன் இவர் அளித்த கடைசி பேட்டி ஒன்றில், ‛‛குடிக்கிறவர்களுக்கு அறிவுரை சொல்லும் அளவுக்கு எனக்கு யோக்கியதை கிடையாது. அந்த தகுதியை நான் இழந்து விட்டேன்'' என்றார். இது வைரலாக பரவியது.