'பைசன்' படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு | ஆதங்கத்துடன் புலம்பும் முகமூடி நடிகை | நடிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் நடிகை | மலையூரு நாட்டாமை மனச காட்டு பூட்டாம..: ‛டூரிஸ்ட் பேமிலி' கமலேஷ் | அனுபமாவின் அனுபவம் | 59 நாட்களில் தமிழ் கற்றேன்: ‛செம்பருத்தி பூ' ஸ்வாதி | நான் ஏன் பிறந்தேன், முத்து, மார்கன் - ஞாயிறு திரைப்படங்கள் | மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ் | ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார் | தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் |

மலையாளத்தில் கடந்த 2007ல் மம்முட்டி நடிப்பில் வெளியான படம் 'பிக் பி'. கேங்ஸ்டர் படங்களில் ஒரு புதிய பாணியில் உருவான இந்த படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இயக்குனர் அமல் நீரத் இயக்கியிருந்த இந்தப்படத்தில் மம்முட்டி பிலால் என்கிற கேங்ஸ்டராக நடித்திருந்தார். கிட்டத்தட்ட 15 வருடங்கள் கழித்து மீண்டும் இதே மம்முட்டி-அமல் நீரத் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'பீஷ்ம பர்வம்'.
கேங்ஸ்டர் பாணியில் உருவாகியுள்ள இந்தப்படம் வரும் மார்ச்-3ஆம் தேதி வெளியாக இருக்கிறது.. மம்முட்டியுடன் 20 வருடங்களுக்கு முன் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் நடித்த தபு, பத்து வருடங்களுக்கு முன் டபுள்ஸ் படத்தில் இணைந்து நடித்த நதியா இருவரும் பல வருடங்களுக்கு பின் மம்முட்டியுடன் இணைந்து இந்தப்படத்தில் நடித்துள்ளனர் என்பதுதான் இந்தப்படத்தின் ஹைலைட்டே.