50 ஆண்டு சாதனை, ரஜினிக்கு பாராட்டு விழா : விஷால் பேட்டி | 'எல்ஐகே' அல்லது 'டியூட்' : ஏதாவது ஒன்றுதான் தீபாவளி ரிலீஸ் | 'தி ராஜா சாப்' போட்டியை சமாளிக்குமா 'ஜனநாயகன்' | 'காட்டி' படத்திற்காக வெளியே வராத அனுஷ்கா | விஷால், சாய் தன்ஷிகாவுக்கு நிச்சயதார்த்தம் : பிறந்தநாளில் இரட்டிப்பு மகிழ்ச்சி | லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் |
நடிக்கும் எண்ணமே இல்லாமல் இயக்குனர் ஜீத்து ஜோசப்பிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மோகன்லாலின் மகன் பிரணவ், பின்னர் எதிர்பாராத விதமாக நடிகராகி விட்டார். முதல் படம் வெற்றி, இரண்டாவது படம் தோல்வி, இதோ சமீபத்தில் வெளியான அவரது மூன்றாவது படமான ஹிருதயம் படம் மூலம் மீண்டும் வெற்றி என, வெற்றி தோல்விகளை மாறி மாறி சந்தித்து வருகிறார் பிரணவ். இந்தப்படம் 50 கோடி வசூல் கிளப்பில் ஏற்கனவே இணைந்து விட்டது.
இந்தநிலையில் தற்போது இமயமலை பகுதியில் ஒரு பயணம் மேற்கொண்டுள்ளார் பிரணவ்.. அங்கே எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் அவ்வப்போது சோஷியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார். இப்போது மட்டும் அல்ல, தனது முதல் படமான ஆதி ரிலீசான சமயத்திலும் கூட இதேபோல இமயமலைக்கு பயணம் கிளம்பியவர் தான் பிரணவ். அநேகமாக இனி இதையே தனது பாணியாக கடைபிடிக்க ஆரம்பித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.