Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

தமனை கட்டிப்பிடித்து பாராட்டிய பவன் கல்யாண்.

22 பிப், 2022 - 13:51 IST
எழுத்தின் அளவு:
Pawan-kalyan-congrats-Thaman

மலையாளத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் வெளியாகி வெற்றி பெற்ற அய்யப்பனும் கோஷியும் படம் தெலுங்கில் தற்போது பீம்லா நாயக் என்கிற பெயரில் ரீமேக்காகி உள்ளது. பவன் கல்யாண் மற்றும் ராணா இருவரும் இணைந்து நடித்துள்ள இந்தப்படத்தை சாஹர் சந்திரா என்பவர் இயக்கியுள்ளார். த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் திரைக்கதை அமைத்துள்ளார். வரும் பிப்-25ஆம் தேதி இந்தப்படம் ரிலீஸாக இருக்கிறது.

தமன் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அய்யப்பனும் கோஷியும் படஹ்தில் ஹிட்டான அறிமுக பாடல் போலவே பீம்லா நாயக் படத்திலும் டைட்டில் பாடலை தெலங்கானாவை சேர்ந்த தர்ஷனம் மொகுலையா என்கிற நாட்டுப்புற பாடகரை அழைத்து பாட வைத்திருந்தார் தமன். தற்போது பின்னணி இசைக்கோர்ப்பு எல்லாம் முடிந்து மொத்த படத்தையும் பார்த்த பவன் கல்யாண் ரொம்பவே சந்தோஷமாகி தமனை பாரட்டியுள்ளார்.

பவன் கல்யாண் தன்னை கட்டியணைத்து பாராட்டிய புகைப்படம் ஒன்றை பகிர்ந்துகொண்டுள்ள இசையமைப்பாளர் தமன், இந்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்ததற்காக இயக்குனர் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸுக்கு தனது நன்றியையும் தெரிவித்துள்ளார். .

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
எங்கள் குடும்பத்துக்கு எதிராக சதி செய்கிறார்கள்: மோகன்பாபு மகன் புகார்எங்கள் குடும்பத்துக்கு எதிராக சதி ... மார்ச் 3ல் ரிலீஸாகும் பீஷ்ம பர்வம் : என்ன ஸ்பெஷல் ? மார்ச் 3ல் ரிலீஸாகும் பீஷ்ம பர்வம் : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in