ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது |
நீண்ட இடைவெளிக்கு பிறகு மோகன்பாபு ஹீரோவாக நடித்த சன் ஆப் இந்தியா படம் சமீபத்தில் வெளிவந்தது. இந்த படத்தை பற்றி சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்து ஏராளமான மீம்ஸ்கள் வந்து கொண்டிருக்கிறது. அதோடு மோகன்பாபுவின் குடும்பத்தையும் கிண்டல் செய்து மீம்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
எங்களுக்கு எதிராக மீம்ஸ் போடுகிறவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும், ஒவ்வொருவரிடமும் 10 கோடி ரூபாய் இழப்பீடு கேட்கப்படும் என்று மோகன்பாபு குடும்பத்தினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இதுகுறித்து மோகன்பாபு மகனும், தெலுங்கு நடிகர் சங்கத் தலைவருமான விஷ்ணு மஞ்சு கூறியிருப்பதாவது: மீம்ஸ்கள் வேடிக்கையாக இருக்கும்போது நாங்கள் அதை ரசிக்கிறோம், அவை கேவலமான ட்ரோலிங்கிற்கு மாறும்போதுதான் பிரச்சினை ஆகிறது. இண்டஸ்ட்ரியில் இருக்கும் இரண்டு பெரிய ஹீரோக்கள் எங்கள் குடும்பத்தை குறிவைத்து இதுபோன்ற காரியங்களில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் யார் என்று எனக்கு தெரியும். ஆனால் காலம் பதில் சொல்லும். எங்கள் பொறுமையை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. என்றார்.
தெலுங்கு நடிகர் சங்கத் தேர்தலில் விஷ்ணு மஞ்சுவை எதிர்த்து போட்டியிட்ட பிரகாஷ்ராஜுக்கு சிரஞ்சீவி குடும்பத்தினர் வெளிப்படையான ஆதரவை தெரிவித்தனர். எனவே சிரஞ்சீவி குடும்பத்தை விஷ்ணு மஞ்சு குற்றம் சாட்டுவதாக கூறப்படுகிறது.