லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
தெலுங்கின் முன்னணி நடிகரான பாலய்யா என்று அழைக்கப்படும் என்.டி.பாலகிருஷ்ணா நடித்த அகண்டா படம் கடந்து ஆண்டு வெளிவந்தது. இதனை போயபதி ஸ்ரீனு இயக்கி இருந்தார். படம் பெரிய வெற்றி பெற்று வசூலை குவித்தது. இதன்பிறகு இதன் இரண்டாம் பாகத்தில் இவர் நடிக்க போகிறார் என்று எதிர்பார்த்திருக்கும் நேரத்தில் வேறு புதிய படத்தில் நடிக்க தொடங்கி விட்டார்.
தெலுங்கானா மாநிலம் சிர்சில்லா நகரில் இந்த படத்திற்கான பூஜை நடந்தது. என்பிகே 107 என்று இப்போதைக்கு படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை, சமீபத்தில் 'கிராக்' படத்தின் மூலம் கவனம் ஈர்த்த கோபி சந்த் மல்லினேனி இயக்குகிறார். ஸ்ருதிஹாசன் ஹீரோயினாக நடிக்கிறார்.