
எங்கள் குடும்பத்துக்கு எதிராக சதி செய்கிறார்கள்: மோகன்பாபு மகன் புகார்
எங்களுக்கு எதிராக மீம்ஸ் போடுகிறவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும், ஒவ்வொருவரிடமும் 10 கோடி ரூபாய் இழப்பீடு கேட்கப்படும் என்று மோகன்பாபு குடும்பத்தினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இதுகுறித்து மோகன்பாபு மகனும், தெலுங்கு நடிகர் சங்கத் தலைவருமான விஷ்ணு மஞ்சு கூறியிருப்பதாவது: மீம்ஸ்கள் வேடிக்கையாக இருக்கும்போது நாங்கள் அதை ரசிக்கிறோம், அவை கேவலமான ட்ரோலிங்கிற்கு மாறும்போதுதான் பிரச்சினை ஆகிறது. இண்டஸ்ட்ரியில் இருக்கும் இரண்டு பெரிய ஹீரோக்கள் எங்கள் குடும்பத்தை குறிவைத்து இதுபோன்ற காரியங்களில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் யார் என்று எனக்கு தெரியும். ஆனால் காலம் பதில் சொல்லும். எங்கள் பொறுமையை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. என்றார்.
தெலுங்கு நடிகர் சங்கத் தேர்தலில் விஷ்ணு மஞ்சுவை எதிர்த்து போட்டியிட்ட பிரகாஷ்ராஜுக்கு சிரஞ்சீவி குடும்பத்தினர் வெளிப்படையான ஆதரவை தெரிவித்தனர். எனவே சிரஞ்சீவி குடும்பத்தை விஷ்ணு மஞ்சு குற்றம் சாட்டுவதாக கூறப்படுகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!