பாடல்கள் ஹிட்டாவதற்கு 'ரீல்ஸ்' வீடியோக்கள்தான் முக்கியமா? | ரஷ்மி முரளி: தோழி நடிகையைத் தேடிய ரசிகர்கள் | விஜய் படம் ரீ-ரிலீசா… அப்போது அஜித் படமும் ரீ-ரிலீஸ்… | விஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டா தம்பதிக்கு பெண் குழந்தை | WWE-ல் ராணா டகுபட்டிக்குக் கிடைத்த பெருமை | வீர தீர சூரன் ஓடிடி வாங்கிய விலை இவ்ளோதானா? | ஓடிடி-யில் பெரும் விலைக்கு மோகன்லாலின் எல் 2 :எம்புரான் | புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே |
சமீபத்தில் தெலுங்கில் வெளியான மோஸ்ட் எலிஜிபிள் பேச்சிலர் படத்திற்கு கிடைத்த வரவேற்பு மற்றும் வெற்றியால் சந்தோஷத்தில் இருக்கிறார் நடிகர் அகில். நாகார்ஜுனாவின் இளைய மகனான இவர் கடந்த சில வருடங்களாக தோல்வி படங்களை கொடுத்து வந்த நிலையில், இந்தப் படத்தின் டீசன்ட்டான வெற்றியின் மூலம் சற்றே நிமிர்ந்து இருக்கிறார். இந்த நிலையில் இவரது அடுத்த படமாக ஏஜெண்ட் உருவாக இருக்கிறது. ரேஸ் குர்ரம் படத்தை இயக்கிய சுரேந்தர் ரெட்டி இந்தப்படத்தை இயக்குகிறார்.
ராணுவ பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் மம்முட்டியும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார் என்று ஏற்கனவே சொல்லப்பட்ட நிலையில், தற்போது அவர் ராணுவ அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. அகிலுக்கு இணையான காட்சிகள் அவருக்கும் இருக்கும்படி கதையை உருவாக்கியுள்ளாராம் கதாசிரியர் வக்கந்தம் வம்சி. விரைவில் இதன் படப்பிடிப்பிற்காக வெளிநாடு செல்ல இருக்கிறார் மம்முட்டி. மேலும் இந்தியாவில் காஷ்மீர், டெல்லி, ஹைதராபாத் ஆகிய இடங்களிலும் இதன் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.