இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
இந்தியாவின் பிற மாநிலங்களில் தியேட்டர்கள் திறக்கப்பட்டு விட்டது. தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் 50 சதவிகித இருக்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் 100 சதவிகித இருக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கேரளாவில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் தியேட்டர்களை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து வரும் 25ம் தேதி 50 சதவிகித இருக்கைகளுடன் தியேட்டர்களை திறக்க கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆனால் கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும். விடுமுறை விடப்பட்ட நாட்களில் மின்வாரியத்தின் வைப்பு நிதியை ரத்து செய்ய வேண்டும். சொத்து வரியை தள்ளுபடி செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்றினால் மட்டுமே தியேட்டர்களை திறப்போம் என தியேட்டர் உரிமையாளர் சங்கத்தினர் கூறியுள்ளனர்.
இதுதொடர்பாக நாளை(22ம் தேதி) தியேட்டர் உரிமையாளர்களுடன் கேரள காலச்சாரத்துறை அமைச்சர் சஜி செரியன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டால் மட்டுமே தியேட்டர்கள் திறக்கப்படும் என்று தெரிகிறது.