2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடித்த 'நா பேரு சூர்யா.. நா இல்லு இந்தியா' என்கிற படம் வெளியானது. இந்தப்படம் மலையாளத்திலும் 'எண்டே பேரு சூர்யா எண்டே வீடு இந்தியா' என்கிற பெயரில் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. தெலுங்கு நடிகர்களில் அல்லு அர்ஜூன் படங்களுக்கு மட்டுமே கேரளாவில் மவுசு அதிகம்..
இந்தநிலையில் சினிமா விமர்சகரான அபர்ணா பிரசாந்தி என்பவர் இந்தப்படத்தை பார்த்துவிட்டு “படம் ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே தலைவலிக்க ஆரம்பித்து விட்டது” என சோஷியல் மீடியாவில் கருத்தை பதிவிட்டிருந்தார்..
இதனால் கோபமான அல்லு அர்ஜுனின் கேரள ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் அபர்ணா பிரசாந்தி மீது கண்டன கணைகளை தொடுக்க ஆரம்பித்து விட்டனர். இதனையடுத்து தன்மீது கொலை மற்றும் கற்பழிப்பு அச்சுறுத்தல் விடுத்ததாக அல்லு அர்ஜூன் ரசிகர்கள் மீது போலீஸில் புகார் கொடுத்துள்ளார் அபர்ணா பிரசாந்தி.