டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

சல்மான் கான் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம், டைகர் ஜிந்தா ஹெ. படம் வெளியான நாளில் இருந்து தற்போது வரை ரூ.280 கோடி வசூலை ஈட்டியுள்ளது. விரைவில் ரூ.300 கோடி பாக்ஸ் ஆபிஸில் இடம்பெறும் என தெரிகிறது.
சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த சல்மான், என்னை பொறுத்தமட்டில், படத்தின் வசூலை விட, ரசிகர்களின் ரசனை தான் முக்கியம். இந்தப்படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு, அவர்களின் அன்பை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அலி அப்பாஸ் ஜாபர் உடன் என்னுடைய இரண்டாவது படம். மீண்டும் அவருடன் பாரத் படத்தில் இணைவது மகிழ்ச்சி என்று கூறியுள்ளார்.
சல்மான்கான் அடுத்தப்படியாக ரேஸ் 3 படத்தில் நடிக்கிறார். விரைவில் இதற்கான படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. இந்தாண்டு ரம்ஜான் பண்டிகையின் போது படம் ரிலீஸாக உள்ளது.