‛வேட்டையன்' வழக்கமான ரஜினி படம் அல்ல - ராணா | ரீ -ரிலீஸ் ஆகும் வில்லு திரைப்படம் | குபேரா படத்திற்காக குப்பை மேட்டில் தனுஷ் | நில மோசடி : நடிகை கவுதமி புகார் | சில கற்றார் பேச்சும் இனிமையே - குமரிமுத்து வீடியோவை பகிர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் பதிவு | கில்லி பார்த்துவிட்டு திரிஷாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கீர்த்தி சுரேஷ் | தக்லைப் படத்திலிருந்து மீண்டும் விலகினாரா ஜெயம் ரவி? | மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் ‛பைசன் காளமாடன்' | மீண்டும் த்ரில்லர் படத்தில் ஜி.வி.பிரகாஷ் | கடலை சுத்தம் செய்ய கிளம்பிய ரெஜினா |
பாலிவுட் மட்டுல்லாது ஷாரூக்கானுக்கு உலகம் முழுக்க ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவர் நடிப்பில் சில மாதங்களுக்கு முன்னர் வெளியான படம் ‛பேன்'. ஷாரூக்கான் இரட்டை வேடங்களில் நடித்த இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு பாக்ஸ் ஆபிசில் வெற்றி பெறவில்லை. இதனிடையே பேன் படத்தை சீனாவில் ரிலீஸ் செய்ய உள்ளனர். இதுப்பற்றி படத்தை வெளியிடும் அவதார் பனேசர் கூறுகையில், ‛‛ஷாரூக்கானுக்கு உலகம் முழுவதும் குறிப்பாக சீனாவிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதன்மூலம் அங்குள்ள அவரது ரசிகர்கள் அவர்களது மொழியிலேயே பேன் படத்தை பார்த்து மகிழலாம். இந்திய படங்களை இந்தியா தவிர்த்து உலகம் முழுக்க மற்ற நாடுகளிலும் கொண்டு சேர்ப்பது மகிழ்ச்சி. நிச்சயம் சீன ரசிகர்களும் இந்தப்படத்தை ரசிப்பார்கள் என்று கூறியுள்ளார்.
பேன் படம் சீனாவின் பீஜிங், ஷாங்காய், நேன்ஜிங் உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் ரிலீஸாக உள்ளது.