அகண்டா 2 படத்தின் முதல் நாள் வசூல் ரூ.59.50 கோடி | நடிகை பாலியல் கடத்தல் வழக்கு : ஆறு பேருக்கு 20 வருட சிறை | ஜெயிலர் 2 புது அப்டேட் வராது ஏன்? | 'ஹேப்பி ராஜ்' இரண்டு குடும்பங்களின் கதை | பிரீத்தி அஸ்ராணிக்காக கதையை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக் : கன்னட எழுத்தாளர் கதையை படமாக்கிய கே. பாக்யராஜ் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே கிராமத்தில் எடுக்கப்பட்ட படம் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் பார்வதி நாயர் படம் | மீரா மிதுன் மீதான வன்கொடுமை வழக்கை தள்ளுபடி செய்ய கோர்ட் மறுப்பு | திருப்பதியில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த ரஜினிகாந்த் |

அஜித்தின் பிறந்தநாளான நேற்று அவரது படங்கள் குறித்த ஏதாவது ஒரு அப்டேட்டாவது வரும் என அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தார்கள். அவர் தற்போது நடித்து வரும் 'விடாமுயற்சி, குட் பேட் அக்லி' ஆகிய இரண்டு படங்களில் ஏதாவது ஒரு படத்திற்காவது ஒரு போஸ்டராவது வரும் என காத்திருந்த ரசிகர்கள் கடைசியில் ஏமாந்து போனார்கள்.
இது குறித்து விசாரித்தபோது 'விடாமுயற்சி' படப்பிடிப்பு இன்னும் முடியவில்லை. ஜுன் மாதம்தான் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஆரம்பமாகப் போகிறது. இப்போதே ஒரு போஸ்டரை விட்டால் அடுத்து டீசர் எப்போது எனக் கேட்பார்கள். எனவே, படப்பிடிப்பு மொத்தமாக முடிந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம் என அஜித் தரப்பில் சொல்லிவிட்டார்களாம்.
'குட் பேட் அக்லி' படத் தயாரிப்பாளர்கள் மட்டும் அஜித்தை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்கள். மற்ற சினிமா பிரபலங்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் அஜித்திற்கு வாழ்த்துகளைச் சொன்னார்கள்.