நேரடியாக ஓடிடியில் வெளியாகும் பிரித்விராஜின் ஹிந்தி படம் | 'பாம்' : காமெடியாக ஒரு படம் | 'என் குறும்பர்கள்' என பதிவிட்ட ரவி மோகன் : 'சூழ்ச்சி' என பதிவிட்ட ஆர்த்தி | தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி மோதல் : பேசி தீர்க்க கோர்ட் உத்தரவு | ஹிந்தி, தெலுங்கில் ரீமேக் ஆன மேஜர் சுந்தரராஜன் படம் | பிளாஷ்பேக் : மர்மயோகியாக மாறிய கரிகாலன் | பிளாஷ்பேக்: எம் ஜி ஆரின் அரசியல் நிலைபாட்டிற்கு அடித்தளமிட்ட “நம் நாடு” | சினிமா ஆன பெண் குல தெய்வங்களின் கதை | தயாரிப்பாளர் மகன் நடிக்கும் ஆக்ஷன் படம் | மீண்டும் வெளிவரும் 'இதயக்கனி' |
ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் ‛வேட்டையன்'. இதில் அமிதாப் பச்சன், ரித்திகா சிங், மஞ்சுவாரியர், துஷாரா விஜயன், பஹத் பாசில் ஆகியோருடன் ராணாவும் நடிக்கிறார். 80 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துள்ளது. இந்த மாதத்திற்குள் மொத்த படப்பிடிப்பும் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தபட அனுபவம் பற்றி ராணா கூறுகையில், ‛‛ரஜினி உடன் நடிக்க விரும்பினேன். அது இவ்வளவு எளிதில் நடக்கும் என எதிர்பார்க்கவில்லை. வேட்டையன் வழக்கமான ரஜினி படமாக இருக்காது. போலீஸ், நீதித்துறை மற்றும் தொழில்துறை சார்ந்த விஷயங்களை இந்தப்படம் பேச இருக்கிறது. இது ஒரு வித்தியாசமான படம். இதுபோன்ற கதைகளில் ரஜினி நடிப்பது மகிழ்ச்சி'' என்றார்.