‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் | வித்யா பாலனுக்கு நன்றி சொன்ன மலையாள காமெடி நடிகர் | திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்தேன் ; பாலிவுட் நடிகை நேஹா துபியா ஓபன் டாக் | காலில் செருப்பு அணியாமல் என்னை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் : விஜய் ஆண்டனி | பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார் | மேலாளரை உன்னி முகுந்தன் தாக்கவில்லை ; நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போலீசார் | ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன் | அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் வில்லனாகும் ஹாலிவுட் நடிகர் |
பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் அமிதாப்பச்சன், தமிழகத்தின் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் ரஜினிகாந்த் இருவரும் எண்பதுகளில் பல இந்தி படங்களில் ஒன்றாக இணைந்து நடித்துள்ளனர். ரஜினிகாந்த் எப்போதுமே அமிதாப்பச்சனை தனது வழிகாட்டி என்றே பெருமையுடன் குறிப்பிடுவார். அந்த வகையில் கிட்டத்தட்ட 35 வருடங்களுக்குப் பிறகு இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து தமிழில் தற்போது த.செ ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் வேட்டையன் படத்தில் நடித்து வருகின்றனர். படப்பிடிப்பில் இருவரும் கலந்து கொண்ட வீடியோக்கள், எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் அவ்வப்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வந்தன.
இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பில் ரஜினிகாந்த்துடன் இணைந்து நடித்த குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் அமிதாப் பச்சன். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தல ரஜினிகாந்த்துடன் மீண்டும் இணைந்து நடித்தது மிகப்பெரிய கவுரவம். மிகப்பெரிய நட்சத்திர அந்தஸ்தில் இருந்தாலும் அவர் கொஞ்சம் கூட மாறவே இல்லை. அதே பணிவு, எளிமை, நட்பு.. அவர் கொஞ்சம் கூட தன்னை மாற்றிக்கொள்ளவே இல்லை” என்று சிலாகித்துக் கூறியுள்ளார். ரஜினியை எல்லோரும் தலைவர் என்று குறிப்பிட்டு வரும் நிலையில் அஜித்திற்குரிய பட்டப்பெயரான தல என்று ரஜினியை அமிதாப் குறிப்பிட்டுள்ளது ஆச்சரியம் அளிக்கிறது.