மீண்டும் ஹிந்தி படத்தில் கீர்த்தி சுரேஷ்? | ஆகஸ்ட் 14ல் ரஜினியின் கூலி திரைக்கு வருகிறது? | சிம்புவிற்கு ஜோடியாகும் கயாடு லோகர் | நீண்ட இடைவெளிக்கு பின் விஜய் படத்தில் இணைந்த நிழல்கள் ரவி | கார்த்தி சுப்பராஜ் பிறந்தநாள் : ரெட்ரோ படத்தின் 55 வினாடி மேக்கிங் வீடியோ வெளியீடு | இளையராஜாவிற்கு தங்கச்சங்கிலி அணிவித்து வாழ்த்திய சிவகுமார் | ரவி அரசு இயக்கத்தில் விஷால்? | 'கொய்யா' விற்ற பெண் பற்றி பிரியங்கா சோப்ரா பெருமிதம் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு | சச்சினுக்கு முன்பு ரீ ரிலீஸ் ஆகும் பகவதி |
நடிகை சமந்தா மயோசிடிஸ் எனும் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டார். இதில் இருந்து மீண்டு வந்துள்ள அவர் மீண்டும் படங்களில் நடிக்கிறார். இருப்பினும் நோய் தாக்கத்தால் அவ்வப்போது சிகிச்சை எடுத்து கொள்கிறார். இன்ஸ்டா தளத்தில் நோயிலிருந்து மீள்வதற்காக என உடலில் டவலை கட்டிக் கொண்டு சிகிச்சை எடுக்கும் போட்டோவை வெளியிட்டு இருந்தார் சமந்தா.
இதன் உடன் பெண் ஒருவர் உடலில் ஆடையின்றி உடல் அங்கங்களை கைகளால் மறைத்தபடி இருக்கும் ஒரு போட்டோவும் வெளியாகி இது சமந்தா என சிலர் பரப்பி வந்தனர். மேலும் அந்த போட்டோவை சமந்தா நீக்கவிட்டதாகவும் வலைதளத்தில் வைரலாக்கினர். இது மார்பிங் செய்யப்பட்ட புகைப்படம் என்றும், இது சமந்தா தான் வலைதளத்தில் கருத்துக்கள் பகிரப்பட்டு வந்தன.
இந்நிலையில் இதற்கு பதில் தரும் விதமாக ‛‛உண்மையான பலம் என்பது உங்களை நியாயப்படுத்தவோ, நிரூபிக்கவோ அல்ல...'' என்ற வாசகத்தை குறிப்பிட்டார் சமந்தா. அதாவது அந்த போட்டோ மார்பிங் என குறிப்பிடவே சமந்தா இப்படி பகிர்ந்ததாக தெரிகிறது.