பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
தெலுங்குத் திரையுலகில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக இருப்பவர் சென்னையைச் சேர்ந்த ரெஜினா. தற்போது செல்வராகவன் இயக்கத்தில் 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். மேலும் சில தமிழ்ப் படங்களில் நடிக்கவும் ஒப்பந்தம் ஆகியுள்ளார். தமிழ், தெலுங்கைத் தொடர்ந்து தற்போது ரெஜினா ஹிந்தித் திரையுலகிலும் அறிமுகமாக உள்ளார்.
2002ம் ஆண்டில் வெளிவந்த 'ஆன்கேன்' படத்தின் இரண்டாம் பாகமாகத் தயாராக உள்ள 'ஆன்கேன் 2' படத்தின் மூலம் ஹிந்தியில் அறிமுகமாக உள்ளார் ரெஜினா. இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், அனில் கபூர், அர்ஷத் வர்சி, மீட் பிரதர்ஸ் மற்றும் பலர் நடிக்கிறார்கள். அனிஸ் பாஸ்மி இந்தப் படத்தை இயக்குகிறார்.
இந்தப் படத்தின் ஆரம்ப விழா மும்பையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அப்போது நடைபெற்ற 'ரேம்ப் வாக்'கில் அமிதாப்பச்சன், ரெஜினா உள்ளிட்ட நட்சத்திரங்கள் கலந்து கொண்டார்கள். தன்னுடைய கிளாமரான ஆடையால் மும்பை வாலாக்களை ரெஜினா அசத்திவிட்டார் என்கிறார்கள். அவருடைய ஆடை படு கிளாமராக இருந்ததாகவும் பேச்சு எழுந்துள்ளது. ஏற்கெனவே தெலுங்குப் படங்களில் 'பிகினி' உடையில் நடித்துள்ள ரெஜினா ஹிந்தியில் கிளாமரில் அசத்துவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ரெஜினாவின் ஹிந்தி அறிமுகம் குறித்து அவருக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.