சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

சுனைனா கதையின் நாயகியாக நடித்துள்ள படம் ரெஜினா. இந்த படத்தை மலையாள இயக்குனர் டொமின் டி சில்வா என்பவர் இயக்கி இருக்கிறார். வருகிற 23ம் தேதி இப்படம் திரைக்கு வர இருக்கும் நிலையில் படக்குழு புரமோசன்களில் தீவிரமடைந்து இருக்கிறது. இந்நிலையில் கேரளாவில் நடைபெற்ற ரெஜினா படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் மேடையில் பேசும்போது கண்ணீர் விட்டு அழுதிருக்கிறார் சுனைனா. அப்போது அவர் பேசுகையில், சில்லுக்கருப்பட்டி என்ற படத்தை பார்த்து விட்டு தான் இந்த ரெஜினா படத்திற்கு என்னை ஒப்பந்தம் செய்தார்கள். இங்கே காட்டப்பட்ட வீடியோவில் என்னுடைய இளம் வயது புகைப்படங்கள் இருந்தது. அப்போதெல்லாம் சினிமா எனக்கு மிகப் பெரிய கனமாக இருந்தது. அந்த கனவு தற்போது நனவாகி உள்ளதை பார்க்கும்போது நான் ஆசீர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன் என்று கூறிய போது கண்ணீர் விட்டு அழுதார் சுனைனா.
தொடர்ந்தவர் பேசும்போது, ரெஜினா படம் எனது கேரியரில் முக்கியமான படமாக இருக்கும். 2018ம் ஆண்டில் அடுத்து என்ன பண்ண வேண்டும் என பலரும் எனக்கு ஆலோசனை கூற ஆரம்பித்ததால், நான் சோர்வடைந்தேன். ஆனபோதும் அந்த ஆலோசனைகளை பொருட்படுத்தாமல் மீண்டும் சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் காட்டினேன். தரமான கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடிக்க தொடங்கினேன். தமிழில் சில்லுக்கருப்பட்டி, தெலுங்கில் ராஜராஜ சோரா போன்ற படங்களை தேர்வு செய்து நடித்தேன். அந்த படங்கள் எனக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்தன. அதே போன்று ரெஜினாவும் ஒரு நல்ல படமாக இருக்கும். இந்த படம் ஒரு சாதாரண குடும்பப் பெண் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகளை மையமாக கொண்ட கதையில் உருவாகி இருக்கிறது. கண்டிப்பாக ரசிகர்களுக்கும் இந்த படம் பிடிக்க வேண்டும் என்று நம்புகிறேன் என்றார் சுனைனா.




