படையப்பா ரீ ரிலீஸ் : ரம்யா கிருஷ்ணன் மகிழ்ச்சி | உண்மை கதையில் விக்ரம் பிரபு | மீண்டும் தள்ளிப் போகிறதா லவ் இன்சூரன்ஸ் கம்பெனி? | காட்டேஜ் 'பெட்' சொல்லும் கதை | பெரும் தொகைக்கு விற்கப்பட்ட 'த்ரிஷ்யம் 3' | மதுபாலாவின் ‛சின்ன சின்ன ஆசை' | பிளாஷ்பேக் : இரண்டு காட்சிகளை வாங்கி இரண்டு படங்கள் தயாரித்த ஏவிஎம் | பிளாஷ்பேக் : அந்த காலத்திலேயே கலக்கிய 'டவுன் பஸ்' | தினமும் எம்ஜிஆரை வேண்டிக் கொண்டு நடித்தேன் : கார்த்தி | ரஜினி மாமனாராக நடிக்க வேண்டியது : திண்டுக்கல் லியோனி சொன்ன புது தகவல் |

காதலில் விழுந்தேன் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சுனைனா. இவர் தமிழ், தெலுங்கு ஆகிய மொழி படங்களில் நடித்து வருகிறார். தற்போது அவர் முதன்மை கதாபாத்திரத்தில் ரெஜினா என்ற படத்தில் நடித்து வருகிறார். நிவாஷ் அதிதன்,ரித்து மந்தரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இயக்குனர் டோமின் டி சில்வா இயக்கும் இப்படத்தை சதிஷ் நாயர் தயாரித்து இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா வருகின்ற ஜூன் 5ம் தேதி அன்று சென்னை பி.வி.ஆர் சினிமாவில் நடைபெறுகிறது என்றும், இதன் ஆடியோ மற்றும் டிரைலரை இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிடுவார் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.