அப்பா படத்தையடுத்து மகன் படத்தின் அப்டேட் | ‛ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா உறுதி : எங்கே தெரியுமா? | மீண்டும் ‛டக்கர்' பட இயக்குனருடன் கைகோர்த்த சித்தார்த்! | ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தில் இணைந்து நடித்துள்ள கணவர், மனைவி! | ‛ரெட்ட தல' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ரஜினி, அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சம்பளத்துக்கு கட்டுப்பாடு? தயாரிப்பாளர் சங்கம் அதிரடி | சைபர் கிரைம் போலீஸில் அனுபமா பரமேஸ்வரன் புகார் | சம்பளத்தை உயர்த்திய நடிகர் மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தி | தந்தை நடிகரின் மிரட்டலால் ஓட்டம் பிடித்த நடிகை | 'ஜனநாயகன்' படத்திற்குக் கடும் சவாலாக இருக்கும் 'ராஜா சாப்' |

காதலில் விழுந்தேன் படத்தில் அறிமுகமாகி பிரபலமானவர் சுனைனா. தற்போது அவர் ரெஜினா என்ற படத்தில் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் இந்த படம் திரைக்கு வரவுள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா கோவையில் உள்ள ஒரு மாலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இப்படத்தின் இயக்குனர் டாமின் டி சில்வா, இசையமைப்பாளர் சதீஷ் நாயர், சுனைனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.
இந்த நிகழ்ச்சிகள் பேசிய சுனைனா, ‛‛ஒரு சாதாரண பெண் எப்படி அசாதாரணமான பெண்ணாக மாறுகிறாள் என்பது தான் 'ரெஜினா' படத்தின் கதை இந்த ரெஜினா படத்திற்காக இரண்டு மாதங்கள் கால்சீட் கொடுத்து நடித்திருக்கிறேன். இதுவரை நடிக்காத ஒரு மாறுபட்ட கதாபாத்திரம் என்பதால் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெரும். அதோடு நான் ஒரு ஸ்டேஜ் ஆர்ட்டிஸ்ட். அதனால் நல்ல கதையாக இருந்தால் எந்த மாதிரியான கதாபாத்திரத்தையும் ஏற்று நடிக்க தயாராக உள்ளேன். வித்தியாசமான வேடங்களில் நடிக்க வேண்டும் என்பது விருப்பம். சினிமாவில் அதுவே என் லட்சியம். இப்போது தான் அப்படி நடக்கிறது. எந்தத் துறையாக இருந்தாலும் முன்னேறுவதற்கு கடின உழைப்பும் குடும்பத்தாரின் ஒத்துழைப்பும் தேவை. எனக்கு அது இருக்கிறது'' என்றார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் ஏற்கனவே தான் நடித்த மாசிலாமணி படத்தில் இடம் பெற்ற ஓடி ஓடி விளையாடு என்ற பாட்டிற்கு மேடையில் நடனமாடிய சுனைனா, காதலில் விழுந்தேன் படத்தில் இடம்பெற்ற உனக்கென நான் எனக்கென நீ என்ற பாடலையும் பாடி அசத்தினார்.