காஞ்சனா 4ம் பாகத்தில் இணைந்த இளம் சீரியல் நடிகை | பாவ்னி - அமீருக்கு ஏப்., 20ல் டும் டும் | கேஜிஎப் 2வை 15 நிமிடத்துக்கு மேல் தொடர்ந்து பார்க்க முடியவில்லை : ராம்கோபால் வர்மா | எம்புரான் படத்தில் நடித்த பாலிவுட் நடிகைக்கு தினசரி மூன்று மணி நேரம் மேக்கப் | 2 வருடம் கழித்து ஓடிடியில் வெளியான மைக்கேல் படத்திற்கு வந்த சோதனை | மகேஷ்பாபுவின் மச்சினிச்சியை கிண்டலடித்த பரா கான் | இங்கிலாந்து திரைப்பட கல்லூரியில் பாடமாக எடுக்கப்பட்ட மம்முட்டியின் பிரம்மயுகம் | த்ரிஷா வீட்டிற்குப் புதிய வரவு இஸ்ஸி | தமிழில் கலக்க வரும் மராத்திய நடிகை | இளையராஜாவின் 'பேரன்பும் பெருங்கோபமும்' |
தமிழில் 'காதலில் விழுந்தேன்' படம் மூலம் அறிமுகமானவர் சுனைனா. தொடர்ந்து மாசிலாமணி, திருத்தணி, வம்சம், நீர்ப்பறவை, தெறி, கவலை வேண்டாம், சில்லுக்கருப்பட்டி, தொண்டன், லத்தி உள்பட பல படங்களில் நடித்தார். கடந்த ஆண்டு 'ரெஜினா' என்ற படத்தில் சோலோ ஹீரோயினாக நடித்தார்.
35 வயதான சுனைனா இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. திருமணம் குறித்த தகவல் வெளிவரும்போதெல்லாம் அதனை உடனடியாக மறுத்து வந்தார். இந்த நிலையில் சுனைனா திருமணத்திற்கு தயாராகி விட்டதை அறிவித்துள்ளார். தனது சமூக வலைத்தளத்தில் ஒரு ஆணின் கைக்குள் தன் கை அடங்கி இருப்பதான ஒரு படத்தை வெளியிட்டுள்ளார், மணமகன் மற்றும் திருமணம் குறித்த தகவல்கள் முறைப்படி வெளியிடப்படும் என்று தெரிகிறது.