டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

நடிகர் ரஜினிகாந்த்தின் மூத்த மகள் மற்றும் இயக்குனர் ஜஸ்வர்யா தற்போது நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் வைத்து லால் சலாம் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் இப்போது ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்து வருகிறார் . இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகின்றனர்.
சமீபத்தில் இந்த படத்தின் போஸ்டர்கள் மற்றும் படத்தை குறித்து கேள்விப்பட்ட தகவல்களை வைத்து உதவி இயக்குனர் ஒருவர் லால் சலாம் என்னுடைய கதை என்று சர்ச்சையை கிளப்பியுள்ளார். இதனை அறிந்த ஜஸ்வர்யா அவரை தொடர்பு கொண்டு அவரின் கதையை வாங்கி படித்தது மூலமாக இந்த கதைக்கும் லால் சலாம் படத்தின் கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தெரியவந்துள்ளது. இதனால் இந்த பிரச்சனைக்கு தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.