வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் |
ஹாலிவுட்டின் சிறந்த காதல் திரைப்படங்களில் ஒன்றாக அமைந்த படம் 'டைட்டானிக்'. 1997ம் ஆண்டு வெளிவந்த அந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்தவர் லியானார்டோ டிகாப்ரியோ. 48 வயதான டிகாப்ரியோ 28 வயதான பிரிட்டிஷ் பஞ்சாபி மாடல் ஆன நீலம் கில் என்பவரைக் காதலிப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. நீலமின் தாத்தா குடும்பத்தினர், இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலிருந்து இங்கிலாந்து சென்று செட்டிலானவர்கள். 1995ல் பிறந்த நீலம், தனது 14 வயதிலேயே மாடலிங் துறையில் நுழைந்தவர்.
கடந்த மாதம் பிரான்ஸில் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் டிகாப்ரியோ, நீலம் கில் ஆகியோர் கலந்து கொண்டார்கள். டி காப்ரியோ இதற்கு முன்பு கேமிலா மார்ரோன் என்பவரைக் காதலித்து வந்தார். அவர்களிருவரும் கடந்த வருடம் பிரிந்துவிட்டார்கள். பின்னர் சூப்பர் மாடலான ஜிகி ஹடிட் என்பவரை டிகாப்ரியோ காதலித்ததாக செய்திகள் வெளிவந்தன. மேலும் 19 வயது மாடலான ஈடன் பொலானி என்பவருடனும் டிகாப்ரியோ கிசுகிசுக்கப்பட்டார்.
கேன்ஸ் திரைப்பட விழாவில் டிகாப்ரியோ நடித்த 'கில்லர்ஸ் ஆப் த பிளவர் மூன்' திரைப்படத் திரையிடலில் நீலமும் கலந்து கொண்டார். நீலமின் இன்ஸ்டாகிராம் கணக்கில் அவரது அசத்தலான கிளாமரான மாடலிங் புகைப்படங்களும், வீடியோக்களும் நிறைந்துள்ளன. விரைவில் அவரது பாலோயர்கள் அதிகமாக வாய்ப்புள்ளது.