175ஐத் தொட்டது 2023ல் வெளியான தமிழ்ப் படங்கள் | விடாமுயற்சி - அஜர்பைஜான் புறப்படும் அஜித் | தனது நிறுவனத்திற்கு ஓகே, சினிமாக்கு நோ : நயன்தாரா பாலிசி | 'முனி 4' போல அடுத்து 'அரண்மனை 4' | ‛அப்பா' படம் வரி விலக்கிற்கு லஞ்சம் கொடுத்தேன் - சமுத்திரகனி | துருவ நட்சத்திரம் படத்திற்கு 11 இடங்களில் கட் | ராஜா ராணி டூ ஜவான் : ப்ரியா அட்லியின் நெகிழ்ச்சி பதிவு | டைகர் ஷெராப் படத்தின் தமிழ் டீசரை வெளியிட்ட த்ரிஷா | புடவை கட்டினாலும் சாந்தினி ஹாட் தான் | வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் சமீரா ஷெரீப் : கம்பேக் எப்போது? |
மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் ரிலீஸ்க்கு தயாராகி வரும் திரைப்படம் மாவீரன். இந்த படத்தில் அதிதி ஷங்கர், மிஷ்கின், சரிதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் பரத் ஷங்கர் இசையமைக்கும் இந்த படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தமிழ்,தெலுங்கு இரு மொழிகளிலும் இப்படம் வருகின்ற ஜூலை 14 அன்று வெளியாகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் சம்மந்தப்பட்ட காட்சிகள் முடிவடைந்தும் தொடர்ந்து மற்ற நடிகர், நடிகைகள் சம்மந்தப்பட்ட காட்சிகள் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இன்று(ஜூன் 3) ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது. இதை மடோன் அஸ்வின் உள்ளிட்ட படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்து அது தொடர்பான போட்டோவை பகிர்ந்துள்ளனர்.