'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
தமிழில் ஜெயிலர், அரண்மனை 4 மற்றும் தெலுங்கில் போலா சங்கர் போன்ற படங்களில் நடித்து வருகிறார் தமன்னா. அதோடு தனது காதலர் விஜய் வர்மாவுடன் இணைந்து லஸ்ட் ஸ்டோரி 2 என்ற ஆந்தாலஜி படத்திலும் நடித்திருக்கிறார். வருகிற 29ஆம் தேதி அந்த படம் வெளியாகிறது. இந்த படத்தில் பல அந்தரங்க காட்சிகளில் தமன்னா நடித்திருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் இதற்கு முன்னதாகவே, ஜி கர்தா என்ற வெப் சீரிஸ் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. இதில் நடிகர் சுஹைல் நய்யாருடன், தமன்னா அந்தரங்க காட்சிகளில் நடித்திருப்பதை பார்த்து ரசிகர்கள் பலத்த அதிர்ச்சி அடைந்தார்கள். இது சோசியல் மீடியாவில் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது.
இந்த தொடரில் தான் அப்படி நடித்தது ஏன்? என்பது குறித்து ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார் தமன்னா. அதில், இந்தத் தொடரானது பள்ளி பருவத்து காதலை விளக்குவதாக அமைந்திருக்கிறது. அந்த அடிப்படையில் சுஹைல் நய்யாருடன் இருக்கும் உறவை விளக்கவும், கதை ஓட்டத்தை வலுப்படுத்தவும் அது போன்ற காட்சி அவசியப்பட்டது. ரிலேஷன்ஷிப் கதைகளில் இது போன்ற நெருக்கமான காட்சிகள் முக்கியமானவை. அதன் காரணமாகவே அந்த காட்சியில் என்னால் நடிக்க முடிந்தது என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்.