பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் புகழ் பெற்ற நடிகையாக விளங்கிய அசினுக்கும், பிரபல தொழிலதிபரான ராகுல் சர்மாவுக்கும் நேற்று டில்லியில் திருமணம் நடைபெற்றது. காலையில் கிறிஸ்துவ முறைப்படி தேவாலயத்தில் திருமணம் நடைபெற்றது. மாலையில் டில்லியில் உள்ள தனியார் ரிசார்ட் ஒன்றில் இந்து முறைப்படியும் திருமணம் நடைபெற்றது. இந்த இரு திருமணங்களிலும் இரு வீட்டாரின் மிக நெருங்கிய நண்பர்களும், உறவினர்களும் மட்டுமே கலந்து கொண்டனர்.
வரும் 23ம் தேதி மும்பையில் திரையுலக நண்பர்களுக்காக வரவேற்பு நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. அசின், ராகுல் சர்மா இருவரது காதலுக்கும் பாலமாக இருந்த ஹிந்தி நடிகர் அக்ஷய் குமார்தான் நேற்றைய இரு திருமண நிகழ்வுகளிலும் மும்முரமாக வேலைகளில் ஈடுபட்டிருந்ததாகச் சொல்கிறார்கள். இதுவரை அதிகாரப்பூர்வமாக அவர்களது திருமண புகைப்படங்கள் வெளியாகவில்லை. திருமணங்களில் கலந்து கொண்டவர்கள் மொபைல் போன்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்தான் வெளியாகியுள்ளன.