நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

உறியடி, உறியடி 2 படங்கள் மூலம் பிரபலமானார் நடிகரும், இயக்குனருமான விஜயகுமார். கடைசியாக பைட் கிளப் படத்தில் நடித்தார். இந்தப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. தற்போது சேத்துமான் பட இயக்குனர் தமிழ் இயக்கத்தில் 'எலக்சன்' என்கிற படத்தில் நடித்துள்ளார். 'அயோத்தி' புகழ் பிரீத்தி அஸ்ராணி, ரிச்சா ஜோஷி, 'வத்திக்குச்சி' திலீபன், பாவெல் நவகீதன், ஜார்ஜ் மரியம், நாச்சியாள் சுகந்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தல் அரசியலை மையப்படுத்தி இப்படம் தயாராகி உள்ளது. இதை ரீல் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, கோவிந்த் வசந்தா இசையமைக்கின்றார். இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்கு தயாராகி இருக்கிறது. இந்த நிலையில் இப்படம் வருகின்ற மே 17ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளனர்.