பிளாஷ்பேக்: ரீ எண்ட்ரி வாய்ப்புகளை மறுத்த சுவலட்சுமி | ‛கேங்ஸ்டர்' ஆக ‛லெஜண்ட்' சரவணன் | ஆண்ட்ரியா படத்தை பார்க்க நீதிபதிகள் முடிவு | சர்தார் 2 படத்தில் உள்ள சிக்கல் | பிளாஷ்பேக்: எழுத்தாளருக்கான தேசிய விருது பெற்ற முதல் நடிகை | இரண்டு பட வாய்ப்பை தவறவிட்ட அனுபமா பரமேஸ்வரன் | ரயில் பைட், ஆட்டமா தேரோட்டமா... : ‛கேப்டன் பிரபாகரன்' மலரும் நினைவில் ஆர்.கே.செல்வமணி | 'கூலி' படத்திற்கு 'ஏ' சான்றிதழ் ரத்தாகுமா ? | 'கேப்டன் பிரபாகரன்' காட்சியைக் காப்பியடித்த 'புஷ்பா 2' | ரஜினி, கமல் மீண்டும் இணைந்து நடிக்கும் படம் சாத்தியமா... : கோலிவுட் தகவல் என்ன...? |
ஹிந்தித் திரைப்படங்கள் 100 கோடி வசூல் அள்ளுவது இனிவரும் காலங்களில் சர்வ சாதாரணமாக ஆகிவிடும் என்று தெரிகிறது. சில வருடங்களுக்கு முன்னர் வரை 100 கோடி ரூபாய் என்பது வசூல் சாதனையாகப் பார்க்கப்பட்டது. தற்போது பல படங்கள் 100 கோடி ரூபாய் வசூலைத் தொட்டு வருவதால், இனி 200 கோடி ரூபாய் கிளப் என்று தான் நிர்ணயம் செய்ய வேண்டும்.
சல்மான் கான் நடித்து கடந்த வாரம் வெளிவந்த 'கிக்' திரைப்படம் ஒரே வாரத்தில் உலகம் முழுவதும் வசூலித்த தொகை 200 கோடியைத் தாண்டி விட்டதாம். இந்தியாவில் மட்டும் வசூலான தொகை 170 கோடிக்கும் மேல் இருக்கும் என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உலகின் மற்ற பகுதிகளில் வசூலான தொகை 30 கோடி ரூபாயாம். ஆக ஒரே வாரத்தில் 200 கோடி வசூலைத் தாண்டி சாதனை படைத்துள்ளது. தொடர்ந்து வசூலைக் குவித்து இந்தப் படம் 300 கோடி ரூபாய் வசூலைத் தாண்டும் என்கிறார்கள்.
இதுவரை வசூலான தொகையை வைத்துப் பார்க்கும் போது அதிக வசூலைக் குவித்த படங்களின் வரிசையில் 'கிக்' ஏழாவது இடத்தைப் பெற்றுள்ளதாம். வரும் வார வசூல் நிலைவரத்தைப் பொறுத்து இந்த வரிசையில் இன்னும் மாற்றம் வரலாம் என்கிறார்கள். சல்மான் கான் , தன்னுடைய முந்தைய சாதனைகளையும் இந்தப் படம் மூலம் முறியடிக்க வாய்ப்புள்ளதாகவும் சொல்கிறார்கள்.