அஜித் அடுத்த பட அறிவிப்பு - தொடரும் தாமதம் | மீண்டும் தெலுங்கு இயக்குனர் படத்தில் சூர்யா ? | 'மாஸ்க்': வாய்ப்பில்லாத ஆண்ட்ரியாவுக்கு வாய்ப்புகள் வருமா? | 50 வருட திரையுலக பயணத்தில் இருந்து ஓய்வு பெறும் நடிகை துளசி | 'மெமரிஸ்' இரண்டாம் பாகம் ; பிரித்விராஜ் விருப்பம் | பட விளம்பர மோசடி ; பெண் உள்ளிட்ட ஐவர் மீது நடிகர் யஷ்ஷின் தாயார் போலீசில் புகார் | இரண்டு நாளில் ஒரு மில்லியன் பார்வைகளைத் தொட்ட மஞ்சு வாரியரின் குறும்படம் | மோகன்லால் மம்முட்டி படங்களை பயன்படுத்தியதால் 2 வருட தடை விதித்தனர் ; இயக்குனர் வினயன் | இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் |

பி.எஸ்.மித்ரன், கார்த்தி கூட்டணியில் சர்தார் படத்தின் வெற்றிக்குப் பிறகு சர்தார் 2 படத்தில் நடித்துள்ளார் கார்த்தி. இப்படத்தில் அவருடன் எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத் , ரஜிஷா விஜயன், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, மைசூர், பேங்காக் போன்ற பல வெளிநாடுகளில் நடைபெற்று நிறைவு பெற்றது.
தற்போது இந்த படத்தின் டிஜிட்டல் வியாபாரம் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தயாரிப்பாளர் இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை 50 கோடிக்கு மேல் கூறுகிறார். ஆனால், டிஜிட்டல் நிறுவனங்கள் அதற்கு குறைவாகத் தான் கேட்கிறார்கள். இதனால் தயாரிப்பாளர் அதிர்ச்சியில் உள்ளனர். இந்த படத்தின் பட்ஜெட் கிட்டத்தட்ட ரூ. 90 கோடி செலவில் உருவாக்கியுள்ளனர் என்கிறார்கள்.