இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

ஆண்ட்ரியா நடித்துள்ள படம் 'மனுஷி'. இந்த படத்தை வெற்றி மாறன் தயாரித்துள்ளார். நயன்தாரா நடித்த 'அறம்' படத்தை இயக்கிய கோபி நயினார் இயக்கி உள்ளார்.
விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படும் இளம் பெண் அங்கு அனுபவிக்கும் சித்ரவதைகள் பற்றிய படம். படத்திற்கு இளையராஜா இசை அமைத்துள்ளார்.
இந்த படம் தணிக்கைக்கு சென்றபோது 37 காட்சிகளுக்கும் பல வசனங்களுக்கும் ஆட்சேபம் தெரிவித்த தணிக்கை குழு அதை நீக்கினால்தான் சான்றிதழ் தரப்படும் என்று கூறிவிட்டது. இதை எதிர்த்து தயாரிப்பாளர் வெற்றி மாறன் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. தணிக்கை வாரியத்தின் விதிமுறைகளுக்கும், நீக்க சொல்லப்பட்ட காட்சிகளுக்கும் பொருத்தம் உள்ளதா என்பதை கண்டறிய படத்தை நீதிபதிகள் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
அதன்படி வருகிற 24ம் தேதி சென்னை இசை கல்லூரி வளாகத்தில் உள்ள தாகூர் கலையரங்கில் உள்ள தியேட்டரில் நீதிபதி 'மனுஷி' படத்தை பார்க்கிறார். அவருடன் தணிக்கை குழு அதிகாரிகள், தயாரிப்பாளர், இயக்குனர் ஆகியோரும் பார்க்கிறார்கள், பின்னர் நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்க இருக்கிறது.