இட்லி கடை, காந்தாரா சாப்டர் 1 படங்களின் வசூல் நிலவரம் என்ன? | நயன்தாராவின் லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை கைப்பற்றிய ரச்சிதா ராம் | கந்தன் மலை படத்தின், கந்தன் மலையை தொட்டுப்பாரு பாடல் வெளியானது | 'டியூட்' வினியோக நிறுவனம் மாறியது ? | ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' நவம்பர் 7 வெளியீடு | 'பாகுபலி எபிக்' ரிலீஸ் : ஓடிடியில் தூக்கப்பட்ட 'பாகுபலி 1, 2' | ரவி மோகன் நடிக்கும் 'ப்ரோ கோட்' படத் தலைப்பு வழக்கு : நீதிமன்றம் உத்தரவு | ரஜினி, ஸ்ரீதேவி மாதிரி பிரதீப் ரங்கநாதன், மமிதா : டியூட் பட இயக்குனர் பேட்டி | அப்பா இறுதி ஊர்வலத்தில் அம்மா ஆடியது ஏன்? : ரோபோ சங்கர் மகள் பேட்டி | மீண்டும் பெரிய திரையில் ஐரா அகர்வால் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த், நாகார்ஜுனா மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் 'கூலி'. பான் இந்தியா படமாக இப்படம் வெளியாகி 400 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்றுள்ளது.
படத்திற்கு 'ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதால் 18 வயதுக்குக் குறைந்தவர்கள் படத்தைப் பார்க்க முடியவில்லை. ரஜினி படங்களை சிறுவர்களும், சிறுமியர்களும் விரும்பிப் பார்ப்பார்கள். ஆனால், இப்படத்திற்கு 'ஏ' சான்றிதழ் காரணமாக அது நடக்கவில்லை.
இதனிடையே, தங்களது படத்திற்கு 'ஏ' சான்றிதழ் வழங்கையதை எதிர்த்து தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்தப் படத்தை விட 'கேஜிஎப்' உள்ளிட்ட சில படங்களில் அதிக வன்முறைக் காட்சி இருந்தும் அவற்றிற்கு 'யுஏ' சான்றிதழை வழங்கியுள்ளனர். ஆனால், தங்களது படத்திற்கு 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த வழக்கு நீதிபதி தமிழ்ச்செல்வி முன் இன்று விசாரணைக்கு வருகிறது. இருந்தாலும் படத்தில் 'ஏ' சான்றிதழுக்கான அந்தக் காட்சிகளை நீக்கிவிட்டு 'யுஏ' சான்றிதழ் வாங்கி முன்பே சரி செய்திருக்கலாமே என சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். அப்படி வாங்கியிருந்தால் சிறுவர்கள், சிறுமியர்கள் படத்தை பெற்றோருடன் வந்து பார்த்திருக்க முடியும். ஒரு வாரம் ஆன பின்பு எந்த சான்றிதழ் வந்தாலென்ன படம் மீதான ஆர்வம் குறைந்து போகுமே என தியேட்டர்காரர்களும் வருத்தப்படுகிறார்கள்.