ஸ்பெயின் கால்பந்தாட்ட மைதானத்தில் வெளியிடப்பட்ட டொவினோ தாமஸ், நஸ்ரியா பட டைட்டில் | 'வாழ' இயக்குனரின் இயக்கத்தில் மஞ்சு வாரியர் நடிக்கும் 'ஹேப்பி லூப்' | ‛கிருஷ்ணாவதாரம்' படத்திற்கு உ.பி.,யில் வரிவிலக்கு அளித்த முதல்வர் யோகி ஆதித்யநாத் | காஞ்சனா 4 படத்தின் அதிரடி போஸ்டர் வெளியானது | மீண்டும் தெலுங்கு படத்தில் யோகி பாபு | ராமாயணா படத்தில் சாய் பல்லவியின் சம்பளம் எவ்வளவு? | மே 18ல் ராம்சரணின் 'பெத்தி' டிரைலர் வெளியீடு | ஏமாற்றம் தந்த ஏப்ரல் மாதம் | 'எல்ஐகே' 200 கோடி வசூலிக்கும் என எதிர்பார்த்தேன் : விக்னேஷ் சிவன் ஆதங்கம் | மீண்டும் வருகிறது 'மணி ஹெய்ஸ்ட்' |

மாரி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள் படத்தில் ஆனந்தி ஹீரோயினாக நடித்தார். அடுத்து அவர் இயக்கிய மாமன்னன் படத்தில் கீர்த்திசுரேஷ் ஹீரோயின். ஆனால், இந்த படங்களில் முதலில் நடிக்க இருந்தவர் அனுபமா பரமேஸ்வரன் தானாம். அவர் சில காரணங்களால் நடிக்க முடியாமல் போக, இவர்கள் நடித்து இருக்கிறார்கள். இதை அனுபமாவே ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்.
இப்போது விக்ரம் மகன் துருவ்வை வைத்து மாரி செல்வராஜ் இயக்கி உள்ள ‛பைசன்' படத்தில் அனுபமா பரமேஸ்வரன் தான் ஹீரோயின். இதில் அவர் தென் மாவட்டத்து பெண்ணாக நடிப்பதாக தகவல். முதல் 2 படங்களில் வாய்ப்பை தவறவிட்ட அனுபமா 3வது படத்தில் பிடித்து இருக்கிறார். இதற்குமுன்பு தனுசுடன் கொடி, பிரதீப் ரங்கநாதனுடன் டிராகன் ஆகிய தமிழ் படங்களில் இவர் நடித்து இருக்கிறார்.




