டியூட் படத்தின் டிஜிட்டல் உரிமை இத்தனை கோடியா? | நடிகைகள் உடன் தனுஷ் பார்ட்டி : போட்டோ வைரல் | ‛கூலி' படத்தின் வெளிநாட்டு உரிமை புதிய சாதனை | மனதை கொள்ளையடிக்கும் மலரே... தினமே... : யாதும் அறியான் முதல் பாடல் வெளியீடு | புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? |
நடிகர் தனுஷ் இப்போது இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தயாராகி வரும் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து அவரின் 50வது படத்தில் நடிக்கவுள்ளார். சமீபத்தில் தனுஷை வைத்து மாரி செல்வராஜ் இயக்கும் படத்தை உண்டர்பார் மற்றும் ஜீ நிறுவனங்கள் இணைந்து தயாரிப்பதாக அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் தென் சென்னை பகுதியில் தனுஷின் ரசிகர் மன்றம் சார்பில் பொதுமக்களுக்காக நீர் மோர் பந்தலை மாரி செல்வராஜ் தொடங்கி வைத்தார். அதன் பிறகு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியது : உண்டர்பார் நிறுவனத்தில் படம் பண்ணுவேன் என்று நான் எதிர்பார்க்கவில்லை. துருவ் படம் முடித்து தனுஷ் சார் படம் உருவாகும். மாமன்னன் படம் இறுதிககட்டத்தில் உள்ளது. சினிமாவில் மிகவும் முக்கியமான படமாக இது இருக்கும்.. நடப்பு அரசியலைப் பற்றி கண்டிப்பாக மாமன்னன் பேசும்.. வடிவேல் நடிப்பு இந்த படத்தில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் ஆக இருக்கும்.
யோகி பாபு மட்டுமல்ல எந்த நடிகர் கூடவும் நான் வேலை பார்ப்பேன்.. தனுஷ் படம் புது பாய்ச்சலை தரும். நான் அவரை வைத்து இயக்கும் படம் வரலாற்று படமாக உருவாகவுள்ளது. அதனால் தான் இந்த படம் கால தாமதம் ஆகிறது. இந்த படம் என்னையும், தனுஷ் சாரையும் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் படமாக இருக்கும் என கூறியுள்ளார்.