லியோ பட இசை வெளியீட்டுவிழா நடத்தப்போவதில்லை :செவன் ஸ்கிரீன் ஸ்டுடீயோ | மகன்களின் முகத்தை காண்பித்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் | விஜய்யின் 68வது படத்தில் இணைந்த இரட்டையர்கள் | தமிழ் ஹீரோ துன்புறுத்தினாரா...? - அப்படி சொல்லவே இல்லை என்கிறார் நித்யா மேனன் | பிரபாஸூக்கு ஜோடியாக ஸ்ரீ லீலா? | மீண்டும் ராஷ்மிகா உடன் இணையும் விஜய் தேவரகொண்டா | பாலிவுட்டில் ஹீரோயின் ஆகிறார் நித்யா மேனன் | ஆர்யாவின் வெப் தொடர் டிசம்பரில் வெளியாகிறது | 5 மொழிகளில் தயாராகும் 'பர்மா' | இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் திருமணம் |
சசிகுமார் நடித்து இயக்குனர் மந்திர மூர்த்தி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் அயோத்தி. வரவேற்பையும், வெற்றியையும், ரசிகர்களின் பாராட்டையும் இந்தப்படம் பெற்று தந்தது. கடந்த சில ஆண்டுகளாக தோல்வியில் இருந்த சசிகுமாரை மீட்டு எடுத்துள்ளது இப்படம்.
இந்நிலையில் இந்த படத்தின் 50வது நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த விழாவில் சசிகுமார் கூறியது; "என் முதல் படம் வெளிவந்த போது என்னை தொடர்பு கொண்டு பாராட்டிய முதல் நபர் நடிகர் சிலம்பரசன் தான். அதேபோல், அயோத்தி படம் வெளிவந்த போது இந்த படத்தின் இயக்குனர் மந்திரி மூர்த்தியை தொடர்பு கொண்டு பாராட்டிய முதல் நபர் சிம்பு தான்" என நெகிழ்ச்சியாக தெரிவித்தார் சசிகுமார்.