பாடல் காட்சியுடன் தொடங்கும் விஜய் 68 படப்பிடிப்பு | பிறந்தநாளில் கமலின் 233வது படத்தின் படப்பிடிப்பு துவங்குகிறது | பகவந்த் கேசரி படத்தின் படப்பிடிப்பு நிறைவு | ஸ்கந்தா படத்தின் முதல் நாள் வசூல் விவரம் இதோ | 'அனிமல்' படத்தில் அப்பா மகன் உறவு | தணிக்கை குழு சான்றிதழ் வழங்க தயங்கிய படம் | விஷாலின் ஊழல் குற்றச்சாட்டு : உடன் நடவடிக்கை எடுத்த மத்திய அமைச்சகம் | பட விழாவை புறக்கணிக்கும் ஸ்வயம் சித்தா : இயக்குனர் புகார் | டொவினோ தாமஸிற்கு ஆசியாவின் சிறந்த நடிகர் விருது | காண்ட்ராக்டர் கொலை மிரட்டல் விடுக்கிறார் : பாபி சிம்ஹா குற்றச்சாட்டு |
பா ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' படம் 2016ம் ஆண்டு வெளிவந்தது. அந்தப் படத்தில் இளமை, முதுமை என இரண்டு விதமான தோற்றங்களில் ரஜினிகாந்த் நடித்திருப்பார். அதிலும் முதுமையான தோற்றத்தில் வெள்ளை நிற முடி, தாடி, கோட், சூட் என அவரது கெட்அப் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.
அப்போது இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த தோனி, 'கபாலி' படத்தில் ரஜினிகாந்த் அமர்ந்திருக்கும் ஒரு போட்டோவை அப்படியே காப்பி செய்து அவருடைய போட்டோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதுவும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
அப்படி 'கபாலி' போட்டோவைக் காப்பி செய்தது குறித்து சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் தோனி பேசினார். “இரண்டையும் ஒப்பிட வேண்டாம். சிறந்த மனிதரின் சிறந்த போஸ் ஒன்றைக் காப்பி செய்து எடுக்க முயற்சித்தோம். அதுக்கு மேல அதுல வேற ஒண்ணுமில்ல. அவரைப் போல யோசிப்பதற்கோ, அவரைப் போல செய்வதற்கோ ரொம்பவே கஷ்டம். குறைந்தபட்சம் அவரோட போஸையாவது காப்பி பண்ணோமே,” எனப் பேசியுள்ளார்.