இளையராஜாவுக்கு 'பாரத ரத்னா' விருது வழங்க பரிசீலனை? | ஆன்லைன் முன்பதிவில் சாதனை படைத்த 'எல் 2 எம்புரான்' | அடுத்த மூன்று முக்கிய வெளியீடுகளில் இசை ஜிவி பிரகாஷ்குமார் | ‛வார் 2' படத்தால் ‛கூலி' படத்திற்கு அடித்த ஜாக்பாட் | சூர்யா 45 படத்தில் படமாக்கப்பட்ட பிரமாண்ட பாடல் காட்சி | சச்சின் ரீ-ரிலீஸ் தேதி அறிவிப்பு | பாண்டிராஜ், விஜய் சேதுபதி படத்தின் தலைப்பு இதுவா? | 9 ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் ரீ என்ட்ரி தரும் வின்சென்ட் செல்வா | 'எம்.குமரன்' ரீ-ரிலீஸ் : நதியா மகிழ்ச்சி | குட் பேட் அக்லி ஓடிடியில் வெளியாகும் தேதி, ரசிகர்கள் அதிர்ச்சி |
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. தற்போது ஹிந்தியில் ஷாரூக்கான் உடன் ஜவான் படத்தில் நடித்து வருகிறார். இதுவரை தமிழில் ரஜினி, அஜித், விஜய், சூர்யா போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டார். ஆனால் கமல்ஹாசன் உடன் இன்னும் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை.
இந்நிலையில் 'இந்தியன்2' படத்திற்கு பின் மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் கமல் இணையுள்ளார். இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிக்க முதலில் த்ரிஷாவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் தற்போது த்ரிஷாவிற்கு பதிலாக நயன்தாராவை நடிக்க வைக்க மணிரத்னம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுபற்றி பேச்சுவார்த்தை நடக்கிறது. விரைவில் இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நயன்தாரா நடிக்கும் பட்சத்தில் முதன்முறையாக கமல் உடன் அவர் இணையும் படம் இதுவாக இருக்கும்.