அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கன்னடத்தில் வெளியான படம் காந்தாரா. இந்த படத்தை இயக்கி கதாநாயகனாகவும் நடித்திருந்தார் பிரபல கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி. இந்த படம் கன்னடத்தில் மட்டுமல்லாது தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. கேஜிஎப் படத்தின் மூலம் எப்படி யஷ் தென்னிந்திய அளவில் மிகப்பெரிய நடிகராக மாறினாரோ அதற்கு அடுத்ததாக ரிஷப் ஷெட்டிக்கும் அந்த அளவிற்கு ரசிகர் வட்டம் சேர்ந்தது.
இதைத் தொடர்ந்து தற்போது காந்தாரா படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் ரிஷப் ஷெட்டி. இந்த நிலையில் நடிகர் மோகன்லாலை சமீபத்தில் சந்தித்துள்ளார் ரிஷப் ஷெட்டி. இது குறித்து அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ள ரிஷப் ஷெட்டி, “ஜாம்பவான் நடிகர் மோகன்லாலை சந்தித்ததில் மிகப்பெரிய கௌரவமும் மகிழ்ச்சியும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்திப்பின்போது ரிஷப் ஷெட்டியின் மனைவி பிரகதியும் உடன் இருந்தார். மோகன்லால் பெங்களூர் சென்றபோது இந்த சந்திப்பு நடைபெற்றதாக சொல்லப்படுகிறது.