'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
மலையாளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரித்திவிராஜ் நடிப்பில் ஆடுஜீவிதம் என்கிற படம் வெளியானது. இயக்குனர் பிளஸ்சி இயக்கிய இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார். எழுத்தாளர் பென்யமின் எழுதிய ஆடுஜீவிதம் என்கிற நாவலை தழுவி இது படமாக்கப்பட்டுள்ளது கேரளாவில் இருந்து அரபு நாட்டிற்கு ஆடு மேய்க்கச் சென்ற நஜீப் என்கிற இளைஞரின் நிஜ வாழ்க்கை சம்பவத்தை மையப்படுத்தி இந்த கதை எழுதப்பட்டிருந்தது. இந்த படம் வெளியாகும் சமயத்தில் இதன் நிஜ கதாநாயகனான நஜீப் படம் குறித்தும் தனது சொந்த அனுபவங்கள் குறித்தும் அவ்வப்போது பல தகவல்களை பகிர்ந்து கொண்டார். இந்த நிலையில் இந்த ஆடுஜீவிதம் படக்குழுவினர் நஜீப்புக்கு பொருளாதார ரீதியாக எந்த உதவியும் செய்யவில்லை என சோசியல் மீடியாவில் கடந்த இரண்டு நாட்களாக ஒரு தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால் இந்த செய்தியை மறுத்துள்ள 'ரியல்' நஜீப், “இந்த தகவலில் எந்த உண்மையையும் இல்லை. பிரித்விராஜும் ஏ.ஆர்.ரஹ்மானும் எனக்கு நிறையவே உதவி செய்திருக்கிறார்கள். ஆனால் அப்படி செய்யும் போது எங்கள் பெயரை எங்கேயும் வெளியில் சொல்லக்க்கூடாது என என்னிடம் கேட்டுக் கொண்டார்கள். அதன் காரணமாகவே அந்த உதவிகளை வெளியே சொல்லாமல் இருந்தேன். ஆனால் இப்போது அவர்கள் மீது தவறாக எண்ணம் வரும் விதமாக செய்திகள் பரப்பப்படுவதால் இனியும் அமைதியாக இருக்க முடியாது என்பதால் அவர்கள் செய்த உதவியை வெளியில் சொல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது” என்று கூறியுள்ளார்