ரசிகர் கொலை வழக்கு : நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடாவுக்கு முன் ஜாமீன் | நடிகை கடத்தல் வழக்கில் நடிகர் திலீப் சிறை செல்ல காரணமாக இருந்த இயக்குநர் மரணம் | விக்ரம் 63வது படத்தின் அறிவிப்பு வெளியானது | சினிமா வேறு, குடும்ப வாழ்க்கை வேறு… : நிரூபித்த நடிகைகள் | 2வது திருமணம் பற்றி சூசமாக தகவல் வெளியிட்ட சமந்தா | சிவகார்த்திகேயன் சம்பளம் அதிரடி உயர்வு ? | சினிமா விருது தேர்வு நடந்து வருகிறது : சென்னை சர்வதேச திரைப்பட தொடக்க விழாவில் அமைச்சர் தகவல் | தனுஷ் தொடர்ந்த வழக்கில் நயன்தாராவுக்கு நோட்டீஸ் | பிளாஷ்பேக்: 80 வருடங்களுக்கு முன்பே வரதட்சனை மாப்பிள்ளைகளை வேட்டையாடிய ஹீரோயின் | பிளாஷ்பேக் : லட்சுமி பிறந்தநாள் - தலைமுறைகளை தாண்டிய நடிகை |
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கன்னடத்தில் வெளியான படம் காந்தாரா. இந்த படத்தை இயக்கி கதாநாயகனாகவும் நடித்திருந்தார் பிரபல கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி. இந்த படம் கன்னடத்தில் மட்டுமல்லாது தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. கேஜிஎப் படத்தின் மூலம் எப்படி யஷ் தென்னிந்திய அளவில் மிகப்பெரிய நடிகராக மாறினாரோ அதற்கு அடுத்ததாக ரிஷப் ஷெட்டிக்கும் அந்த அளவிற்கு ரசிகர் வட்டம் சேர்ந்தது.
இதைத் தொடர்ந்து தற்போது காந்தாரா படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் ரிஷப் ஷெட்டி. இந்த நிலையில் நடிகர் மோகன்லாலை சமீபத்தில் சந்தித்துள்ளார் ரிஷப் ஷெட்டி. இது குறித்து அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ள ரிஷப் ஷெட்டி, “ஜாம்பவான் நடிகர் மோகன்லாலை சந்தித்ததில் மிகப்பெரிய கௌரவமும் மகிழ்ச்சியும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்திப்பின்போது ரிஷப் ஷெட்டியின் மனைவி பிரகதியும் உடன் இருந்தார். மோகன்லால் பெங்களூர் சென்றபோது இந்த சந்திப்பு நடைபெற்றதாக சொல்லப்படுகிறது.