'தக் லைப்' டிரைலர் : 24 மணி நேர சாதனை என்ன? | 'ரெட்ரோ' 235 கோடி வசூல்: ஷாக் ஆன ரசிகர்கள் - உண்மை என்ன? | ஆறு மாத இடைவெளியில் அழகாக யோசிக்கும் ஆதிக் | விஜய்சேதுபதி சொன்ன சைக்கிள் கதை | கங்கை அமரன் அப்படி பேசலாமா? : ஜி.வி.பிரகாஷ் ஆதரவாக குரல்கள் | கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! |
அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா படங்களுக்கு பிறகு ஆர்யா நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கிய படம் சார்பட்டா பரம்பரை. 2021ம் ஆண்டு நேரடியாகவே ஓடிடி.,யில் வெளியான இந்த படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இப்படத்திற்கு தேசிய விருது கிடைக்க வாய்ப்பிருப்பதாகவும் கருத்துக்கள் நிலவின. ஆனால் எதிர்பார்த்தபடி விருது கிடைக்கவில்லை.
இந்த நிலையில் அது குறித்து பா.ரஞ்சித் அளித்த ஒரு பேட்டியில் கூறுகையில், ‛‛சார்பட்டா பரம்பரை படத்தை ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடினார்கள். அதேசமயம் படத்தின் இரண்டாம் பகுதி சரி இல்லை என்று சிலர் விமர்சனம் செய்தார்கள். சில விழாக்களில் கிரிட்டிக்ஸ் பிரிவில் சார்பட்டா பரம்பரை பல விருதுகளை பெற்றுள்ளது. இந்த விருதை பெற்றால் கண்டிப்பாக தேசிய விருது கிடைக்கும். ஆனபோதும் சார்பட்டா பரம்பரை படத்திற்கு தேசிய விருது கிடைக்கவில்லை. காரணம் திட்டமிட்டு சிலர் எனது வேலையை மதிக்கக்கூடாது என்று புறக்கணிக்கிறார்கள். என் மீதான வெறுப்பை தான் இப்படி வெளிப்படுத்தினார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது'' என்று தெரிவித்திருக்கிறார் பா. ரஞ்சித்.