2025 பொங்கல் போட்டியில் என்னென்ன படங்கள் ? | பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லும் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா | சங்கராந்தி தினத்தில் ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' | இட்லி கடை படப்பிடிப்பு தளத்தில் இருந்து லீக்கான வீடியோ | ராம்கோபால் வர்மா - பஹத் பாசில் சந்திப்பு : பின்னணி என்ன ? | கேரள மலைப்பகுதிகளில் கேஷுவலாக ஜாக்கிங் போகும் விஜய் தேவரகொண்டா | 4 மணிநேர காத்திருப்பு : ஸ்ருதிஹாசனை அவதிக்குள்ளாக்கிய விமான நிறுவனம் | புதிய பிரபஞ்சம் உருவானாலும் அங்கேயும் ரஜினி ஒருவர்தான் : ரித்திகா சிங் பிரமிப்பு | மாமனார் அமிதாப்புக்கு தாமதமாக வாழ்த்து சொன்ன ஐஸ்வர்யா ராய் | எனக்கு தொழில் ரொமான்ஸ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நடிகரும், தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்த் கடந்த ஆண்டு டிச.,28ம் தேதி காலமானார். நடிகராக வளர்ந்து வந்த காலத்திலேயே தனது ரசிகர் மன்றம் மூலம் மக்களுக்கான நலத் திட்டங்களில் அதிக அளவில் முனைப்புக் காட்டியவர். ஏழை மக்களின் தேவைகளை அறிந்து செயல்பட்ட அவர், தேவையான விஷயங்களுக்கு நிதியுதவி, நன்கொடை அளித்தல், இளைஞர்களுக்கான பல்வேறு முன்னெடுப்புகள், இலவசத் திருமணங்கள், விளையாட்டு அகாடமி என பல்வேறு துறைகளில் முத்திரை பதித்தார்.
இவரது 72வது பிறந்தநாளான இன்று, சென்னை தேமுதிக தலைமை அலுவலகத்தில் அவரது திருவுருவ சிலையை, கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா திறந்து வைத்தார். சிலையை திறந்து வைத்த பிரேமலதா, கண் கலங்கினார். விஜயகாந்த் சிலை திறப்பு விழாவில் விஜயகாந்தின் மகன்கள், தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
காலை முதலே ஏராளமான தொண்டர்கள் விஜயகாந்தின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வந்தனர். அப்போது அவரது மகனும் நடிகருமான சண்முக பாண்டியன் கூட்ட நெரிசல் காரணமாக மயங்கி விழுந்தார். இதனையடுத்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.